![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) (முதல் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | முதல் பாகம் |
நவம்பர் 04, 2019 முதல் மார்ச் 29, 2020 வரை அனைத்திலும் பிரச்சனைகள் (25 / 100)
குரு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில், சனி பகவான் மற்றும் கேதுவோடு இணைந்து சஞ்சரிகின்றார். இதனால் அதிக தடைகளும், ஏமாற்றங்களும் ஏற்படும். அஷ்டம குரு மற்றும் அஷ்டம சனியின் உண்மையான தாக்கத்தை நீங்கள் இப்போது உணருவீர்கள். நீங்கள் எதிர்பார்க்காத மோசமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கக் கூடும். உங்கள் மனோ பலத்தை இந்த காலகட்டத்தில் அதிகரித்துக் கொண்டு உங்கள் வாழ்க்கையை கடக்க வேண்டும். உங்கள் மகா தசை அல்லது அந்தர தசை பலவீனமாக இருந்தால், அதிக மன உளைச்சலை நீங்கள் காணக் கூடும்.
உங்கள் மனம், மற்றும் உடல் அதிக எதிர்மறை சக்திகளால் பாதிக்கப்படலாம். உங்கள் குடும்பத்தினர்களின் உடல் நலத்தின் மீது அதிக கவனம் தேவை. வாகனம் ஓட்டும் போது அதிக கவனம் தேவை. விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் உங்கள் மன நிம்மதியை கெடுக்கக் கூடும். நீங்கள் யாரியாவாகத்து விரும்புகின்றீர்கள் என்றால், அதிக ஈடுபாட்டுணனும், உணர்சிகளுடனும் இருப்பதால், நீங்கள் சக்தியை இழக்க நேரிடும்.
திருமணம் ஆன தம்பதியினர் தங்கள் உறவிள் அதிக பிரச்சனைகளை சந்திப்பார்கள். உங்கள் குடும்ப வாழ்க்கையில் அதிக பொறுமையோடு இருந்து உங்கள கோபத்தை தவிர்க்க வேண்டும். இதனால் குடும்பத்தினர்களுடன் சட்ட பிரச்சனைகளையும், பிரிவுகளையும் தவிர்க்கலாம். உங்கள் மீது தவறு எதுவும் இல்லை என்றாலும், அவமானப் படும் சூழலும், அவப்பெயர் பெரும் சூழலும் ஏற்படும். உங்கள் வேலை / உத்தியோகம், அதிகரிக்கும் அரசியலால் அதிகம் பாதிக்கப் படலாம். இதனால் நீங்கள் வேலையை இழக்கும் சூழல் உண்டாகலாம். உங்களுக்கு வருமான வரி பிரச்சனைகளும், சட்ட ரீதியான பிரச்சனைகளும் ஏற்படக் கூடும்.
பண விடயங்களில் நீங்கள் ஏமாற்றப் படலாம். பங்கு சந்தை முதலீடுகள் உங்களுக்கு நிதி இழப்பை உண்டாக்கக் கூடும். தொழிலதிபர்கள் கடுமையான நேரத்தை தற்போது சந்திக்க நேரிடலாம். மேலும் நிதி இழப்பையும் சந்திக்க நேரிடலாம். ஊக வர்த்தகத்தில் முதலீடு செய்வது நல்ல யோசனை அல்ல. ஒரு நல்ல ஆலோசகரின் ஆலோசனை பெற்று இந்த கடுமையான காலகட்டத்தை கடக்க முயற்சி செய்யுங்கள்.
Prev Topic
Next Topic