குரு பெயர்ச்சி (2019 - 2020) உடல் நலம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி)

உடல் நலம்


குரு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் கடந்த ஒரு வருடமாக இருந்தார். அதனால் அஷ்டம சனியின் தாக்கம் சற்று குறைவாக காணப்பட்டது. எனினும் நவம்பர் 2019 முதல் மார்ச் 2020உடல் உபாதைகள் அதிகமாக ஏற்படலாம். உங்களுக்கு மன அழுத்தம், தேவையற்ற பயம் மற்றும் பதற்றம் ஏற்படலாம். நிகழவிருக்கும் சனி பெயர்ச்சியில், சனி பகவான் உங்கள் ராசியின் 9ஆம் வீட்டிற்கு பெயருவதால், உங்கள் பெற்றோர்களின் உடல் நலம் பாதிக்கப்படலாம். உங்களது நெருங்கிய உறவுகளான, மனைவி /கணவன், குழந்தைகள், பெறோர்கள் அல்லது நண்பர்களுடன் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு ஏறபடும் பிரச்சனைகள் உங்கள் மன வருத்தத்தை அதிகரிக்கக் கூடும்.
உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் நீங்கள் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் மது, புகை பிடித்தல் போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையாகலாம். உங்கள் சொந்த வாழ்க்கையில் நடக்கும் விடயங்களை யாரிடமும், அது உங்கள் நெருங்கிய நண்பராக இருந்தாலும், பகிராமல் இருப்பது நல்லது. உங்கள் கட்டுப்பாடு இன்றி நீங்கள் சூதாட்டத்தில் ஈடுபடக் கூடும். தனிமையில் இருப்பது அதிக பிரச்சனைகளை உண்டாக்கக் கூடும். குறிப்பாக நீங்கள் வெளிநாட்டில் தனியாக இருந்தால், உங்கள் பிரச்சனைகள் அதிகமாகக் கூடும். ஒரு நல்ல ஆலோசகரை அணுகி ஆலோசனை பெற்று இந்த கடுமையான காலகட்டத்தை, குறிப்பாக உங்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்களில் இருந்து விடுபட முயற்சி சிய வேண்டும். சுதர்சன மகா மந்திரம் மற்றும் ஹனுமன் சலிச கேட்பதால் சற்று ஆறுதலாக இருக்கும்.




Prev Topic

Next Topic