குரு பெயர்ச்சி (2019 - 2020) காதல் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி)

காதல்


எதிர் பாரா விதமாக காதலர்களுக்கு இது மோசமான நேரமாக இருக்கும். நீங்கள் உங்கள் உறவில் காதல் குறைந்து, அதற்கு மாறாக அதிக வலி நிறைந்த சூழலை சந்திக்க நேரிடலாம். உங்கள் உறவு இதற்கு மேல் நீடிக்காது என்று சொல்ல உங்கள் மனம் அதிகம் நினைக்கும். எனினும், அதே நேரம், எந்த முடிவும் தற்போது எடுக்காமல் இருப்பது நல்லது என்றும் உங்களுக்குத் தோன்றும். குழப்பங்கள், நிலை இல்லா தன்மை மற்றும் தேவையற்ற பயம் ஆகியவை உங்கள் சக்தியை குறைத்து விடும். உங்கள் உடல் நலமும் பாதிக்கப்படலாம். மேலும் உங்களுக்கு மனதில் அதிகம் வலி ஏற்பட்டு, மன உளைச்சலோடு நீங்கள் இருக்க நேரிடும்.
உங்கள் காதல் விருப்பத்தை நீங்கள் விரும்புபவரிடம் கூற இது ஏற்ற நேரம் இல்லை. நீங்கள் உங்கள் காதல் விருப்பத்தை கூற முயற்சி செய்தால், அவமானப் படும் சூழலோ, அல்லது உங்களை அவர் தவறாக பயன்படுத்திக் கொள்ளும் சூழலோ உண்டாகலாம். நீங்கள் அதிக உணர்ச்சிவசப் படுவதால், உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் முன் நீங்கள் மனம் வருந்தும் சூழல் உண்டாகலாம், உங்கள் மனதில் பயமும், தேவையற்ற எண்ணங்களும் உண்டாகலாம், மேலும் தவறான நபரை நோக்கி நீங்கள் ஈர்க்கப்பட்டு, உங்கள் வாழ்க்கை பாதிக்கப்படலாம்.


திருமணம் ஆனவர்கள் நல்ல அன்யுனியத்தோடு இருந்தாலும், அவர்களுக்கு அதிக பதற்றமும், அதிக உடைமையோடு இருக்கும் குணங்களும், மற்றும் உணர்சிகளும் இருக்கும். இந்த காலகட்டத்தில் குழந்தை பேரு பெற திட்டமிடுவது நல்ல யோசனையாக இருக்காது. நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், அக்டோபர் 2௦2௦ வரை காத்திருந்து அதன் பின் திருமண முயற்சிகளை செய்யலாம். இது உங்கள் மன பதற்றம் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும்.


Prev Topic

Next Topic