குரு பெயர்ச்சி (2019 - 2020) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி)

கண்ணோட்டம்


சனி பகவான் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரித்தாலும், குரு நல்ல நிலையில் சஞ்சரித்ததால், கடந்த 12 மாதங்கள் கலவையான பலன்களை பெற்றிருப்பீர்கள். தற்போது, குரு உங்கள் ராசியின் 8ஆம் வீடான அஷ்டம ஸ்தானத்திற்கு நவம்பர் 4, 2019 அன்று பெயருகிறார். சனி பகவான் உங்கள் ராசியின் பாக்ய ஸ்தானத்திற்கு மார்ச் 2௦2௦ முதல் பெயர்ந்து உங்களுக்கு சில நிவாரணங்களைத் தருவார். எனினும் நவம்பர் 2019 முதல் பெப்ரவரி 2020 வரை சனி பகவான், குரு மற்றும் கேது இணைந்து உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் சற்று சிக்கல் நிறைந்ததாக இருக்கலாம்.
எதிர் பாரா விதமாக தற்போது தொடங்கும் இந்த குரு பெயர்ச்சியின் தொடக்க காலம் உங்களுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்காது. அதிக இன்னல்களையும், சொந்த வாழ்க்கையில் பிரச்சனைகளையும் மற்றும் ஏமாற்றங்களையும் நீங்கள் சந்திக்க நேரிடலாம். மேலும் மன ரீதியாகவும் நீங்கள் பாதிக்கப்படலாம். உங்கள் பிறந்த சாதகம் பலவீனமாக இருந்தால், உங்கள் நற்பெயரும் பாதிக்கப்படலாம். உங்கள் உத்தியோகத்தில் நீங்கள் பதவி இறக்கம் செய்யப்படலாம் அல்லது உத்தியோகத்தை இழக்கும் சூழலும் ஏற்படலாம். செலவுகள் விண்ணைத் தொடும் அளவிற்கு உயரும். பண விடயங்களில் நீங்கள் ஏமாற்றப் படலாம். பெப்ரவரி 2௦2௦ வரை விடயங்கள் அனைத்தும் உங்கள் கட்டுபாட்டை மீறி நடக்கக் கூடும்.


மார்ச் 2௦2௦ முதல் அடுத்த 4 மாதங்களுக்கு உங்களுக்கு சில நிவாரணம் கிடைக்கும். இந்த காலகட்டத்தை பயன்படுத்தி முக்கிய முடிவுகளை எடுக்க முயற்சி செய்யலாம். ஏனென்றால், ஆகஸ்ட் 2௦2௦ முதல் அக்டோபர் 2௦2௦ நீங்கள் மீண்டும் மற்றுமொரு சோதனை காலத்தை சந்திக்க நேரிடலாம். உங்கள் வாழ்க்கையில் அடுத்த 12 மாதங்களுக்கு அதிக அளவு சவால்களை நீங்கள் சந்திக்க நேரிடும். அதனால் ஏதாவது முதலீடுகள் செய்வதாக இருந்தாலும், முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்றாலும், அதற்கு முன் உங்கள் சோதிடரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.


Prev Topic

Next Topic