![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) வர்த்தகம் மற்றும் முதலீடுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | வர்த்தகம் மற்றும் முதலீடுகள் |
வர்த்தகம் மற்றும் முதலீடுகள்
முக்கிய கிரகங்கள் இணைந்து உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரித்து கடுமையான இழப்பை உங்கள் பங்கு சந்தை வர்த்தகத்திலும், முதலீடுகளிலும் கொடுக்கக் கூடும். பல வருடங்களாக சேர்த்து வைத்த லாபத்தை ஒரே இரவில் நீங்கள் இழக்க நேரிடும். உங்களுக்கு இந்த காலகட்டத்தில் நிதி இழப்பு ஏறப்ட்டால், அதில் இருந்து மீண்டு வர உங்களுக்கு 5 முதல் 1௦ வருடங்கள் ஆகலாம். முதலீடு குறித்த விடயங்களுக்கு உங்கள் நேரம் மோசமாக உள்ளது. அதனால் நவம்பர் 2௦2௦ வரை பங்கு சந்தையை விட்டு விலகி இருப்பது நல்லது.
உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், அடுத்த ஒரு வருடத்திற்கு உங்கள் முதலீடுகள் கடுமையான சூழல்களை சந்திக்க நேரிடும். குறிப்பாக கட்டுமானப் பணிகளில் அல்லது ரியல் எஸ்டேட் ப்ரோஜெக்ட்டுகளில் நீங்கள் அதிக பணத்தை போட்டிருந்தால், அரசு கொள்கைகளில் சில மாற்றங்கள் ஏற்படுவது, வங்கி கணக்கு திவால் ஆவது அல்லது வேறு சில பின்னடைவுகள் ஏற்படுவது போன்ற காரணங்களால் அதை இழக்க நேரிடும். முதலீடுகள் செய்வதற்காக சொத்துக்கள் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. நீங்கள் ஒரு வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பு வாங்க முன் பணம் கொடுத்தால், அதை வாங்கிய கட்டுமான நிறுவனம் தலைமறைவாக வாய்ப்பு உள்ளது. இதனால் உங்கள் பணத்தை நீங்கள் இழந்து விடக் கூடும். மேலும் உங்கள் வீட்டில் வாடகைக்கு குடி இருப்பவர்கள் உங்களுக்கு பிரச்சனைகளை உண்டாக்கக் கூடும். நீங்கள் நிலம் வைத்திருந்தாள், அதில் மூன்றாவது மனிதர்கள் கடந்து பயன் படுத்துவதால் பிரச்சனைகள் உண்டாகக் கூடும். நீங்கள் உங்கள் பணத்தை பாதுகாப்பான சேமிப்பு, நிரந்தர இருப்புத் தொகை அல்லது பாண்டுகள் போன்றவற்றில் முதலீடு செய்வது நல்லது.
Prev Topic
Next Topic