![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) பயணம், வெளிநாட்டு சுற்றுலா மற்றும் குடியேறுதல் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | பயணம், வெளிநாட்டு சுற்றுலா மற்றும் குடியேறுதல் |
பயணம், வெளிநாட்டு சுற்றுலா மற்றும் குடியேறுதல்
ஜூலை 2019 முதல் அக்டோபர் 2019 வரை நீங்கள் வெளிநாட்டிற்கு குடி பெயர்ந்திருக்கலாம். ஆனால் அதனை நீங்கள் கடின உழைப்பாலும், பல தடைகளுக்கு இடையிலும் பெற்றிருப்பீர்கள். குரு தற்போது உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், புது பிரச்சனைகளை நீங்கள் வெளி நாட்டில் சந்திக்க நேரிடலாம். உங்களுக்கு சரியான தங்கும் வசதி கிடைக்காமல் போகலாம். மேலும் புது இடத்தை பற்றி உங்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால், அங்கு இருக்கும் மக்கள், உங்களை ஏமாற்ற முயற்சி செய்யலாம். உங்களது சமூக வாழ்க்கை, நல்ல நண்பர்கள் இல்லாததால் பாதிக்கப் படலாம். தொலை தூர பயணத்தை எந்த ஒரு சொந்த காரனதிர்க்காகவும் செய்வதை தவிர்ப்பது நல்லது. பயண சீட்டு, தங்கும் வசதி போன்றவற்றை முன் பதிவு செய்வதற்கு உங்களுக்கு நல்ல சலுகைகள் கிடைக்காமல் போகலாம். மேலும் பயணத்தின் போது அசௌகரியங்கள் ஏற்படலாம். எனினும் கோவில் மற்றும் புண்ணிய தளங்களுக்கு செல்ல திட்டமிடலாம்.
நீங்கள் வெளி நாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தால்ம், உங்களுக்கு விசா குறித்த பிரச்சனைகள் ஏற்படக் கூடும். வேலைக்காக நீங்கள் அணுகும் நிறுவனம் உங்களது விசா மற்றும் பாஸ்போர்டை வாங்கி வைத்துக் கொண்டு, உங்களை ஓய்வில்லாமல் வேலை பார்க்க கட்டாயப்படுத்தலாம். எந்த குடியேற்ற பலன்களும் தற்போது உங்களுக்கு கிடைக்காது. குறிப்பாக கிரீன் கார்டு மற்றும் நிரந்தர குடியுரிமை போன்றவரை தற்போது எதிர் பார்க்க முடியாது. நீங்கள் விசா ஸ்டம்பிங் செய்ய பயணம் செய்ய முயற்சி செய்தால், எந்த ஒரு சரியான காரணமும் இல்லாமல், உங்கள் விசா அப்படியே தேக்கம் பெறலாம். விசா மற்றும் குடியேற்ற பலன்கள் பெற உங்கள் பிறந்த சாதக பலன் நன்றாக இருக்க வேண்டும், அல்லது உங்கள் சோதிடரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.
Prev Topic
Next Topic