குரு பெயர்ச்சி (2019 - 2020) வேலை மற்றும் உத்தியோகம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி)

வேலை மற்றும் உத்தியோகம்


கடந்த ஒரு வருடம் உங்கள் உத்தியோகம் குறித்த விடயங்களில் நீங்கள் கலவையான பலன்களை கண்டிருப்பீர்கள். குரு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிற்கு நவம்பர் 4, 2019 அன்று பெயருவதால், குருவின் தாக்கம், சனி பகவான் மற்றும் கேது இணைந்து உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரித்துக் கொண்டிருப்பதால் அதிகமாக உணரக் கூடும். மேலும் உடனடியாகவும் உணரக் கூடும். நீங்கள் ப்ராஜெக்ட் ரத்தாவது, செயல் திறன் குறைபாடு மற்றும் வேறு சில காரணங்களால் உங்கள் வேலையை இழந்தாலும், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. நீங்கள் எதிர் பார்த்த சம்பளம் மற்றும் பதவி உயர்வு கிடைக்காததால் ஏமாற்றம் அடைவீர்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளை முற்றிலுமாக குறைத்துக் கொள்வது முக்கியம்.
உங்கள் மேலாளர் உங்களை அவமதித்தும், உங்கள் மனம் புண்படும் படியும் நடந்து கொள்வார். எனினும் நீங்கள் உங்கள் வேலையை தக்க வைத்துக் கொள்ள அதிக பொறுமையோடு இருக்க வேண்டும். உங்கள் HR அல்லது உயர் அதிகாரிகளிடம் எந்த புகாரும் கூறாமல் இருப்பது. ஏனென்றால், அது உங்கள் உத்தியோகத்தை பாதித்து விடக் கூடும். உங்களால் சொந்த வாழ்க்கையையும், உத்தியோகத்தையும் சமாளிக்க முடியாமல் போகலாம். உங்களுக்கு விருப்பம் இல்லாது, அல்லது உங்களுக்கு முன்னேற்றம் தராத ப்ரோஜெக்ட்டில் நீங்கள் வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். அலுவலகத்தில் உண்டாகும் அரசியல் மற்றும் உங்களுக்கு எதிரான சதியால் நீங்கள் அதிகம் பாதிக்கப்படலாம். அனேக நேரங்களில் உங்களுக்கு என்ன நடக்கப் போகின்றது என்பதை பற்றி உங்களுக்கு தெரியாமல் இருக்கும்.


குடுமபத்தில் இருக்கும் பெண்களைத் தவிர, பிற பெண்களிடம் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். குறிப்பாக வெளி இடங்களிலும், அலுவலகத்திலும் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். நீங்கள் பெண்ணாக இருந்தால், உங்களுக்கு மேலாளர், சூபர்வைசர் போன்ற உயர் அதிகாரிகளிடம் இருந்து பிரச்சனை வரலாம். நீங்கள் நல்ல நட்போடு பிறரிடம் பழகினாலும் அவர்கள் உங்களை தவறாக பயன்படுத்தி, உங்களை பற்றி தவறான வதந்திகளை பரப்புவார்கள், இதனால் உங்கள் நற்பெயர் பாதிக்கப்படலாம். உங்களுடன் வேலைபார்ப்பவருடம் காதலில் விழுவது ஒரு மோசமான சூழலாக உங்கள் வாழ்க்கையில் அமைந்து விடும். இதனால் அடுத்த ஒரு வருடத்திற்கு நீங்கள் பல இன்னல்களை சந்திக்க நேரிடலாம். உங்கள் நற்பெயரை பாதிக்கக் கூடிய எந்த ஒரு நட்பிடம் இருந்தும் விலகி இருப்பது நல்லது. நீங்கள் ஒப்பந்தம் அடிப்படையில் வேலை பார்கின்றீர்கள் என்றால், உங்களுக்கு வேலை கொடுக்கும் நிறுவனம் உங்கள் சம்பளத்தில் இருந்து ஒரு பெரியத் தொகையை எடுத்துக் கொள்ள நேரிடும்.


Prev Topic

Next Topic