குரு பெயர்ச்சி (2019 - 2020) தொழில் அதிபர்கள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kanni Rasi (கன்னி ராசி)

தொழில் அதிபர்கள்


தொழிலதிபர்களுக்கு 2019 ஒரு மோசமான ஆண்டாக இருந்திருக்கும். ராகு உங்கள் ராசயின் 1௦ஆம் வீட்டிலும், சனி பகவான் 4ஆம் வீட்டிலும், குரு 3ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்கள் வாழ்க்கையில் மோசமான சூழலை உண்டாக்கி இருந்திருப்பார்கள். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்திருந்தால், நீங்கள் உங்கள் தொழிலை சரியாக நடத்த முடியாமல், அதிக நட்டம் ஏற்பட்டு, வங்கி கணக்கு திவாலாகும் நிலையம் உண்டாகி இருந்திருக்கும். குரு உங்கள் ராசியின் 4ஆம் வீட்டிற்கு பெயர்ந்தாலும், நவம்பர் / டிசம்பர் 2019 உங்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்காது.
எனினும் சனி பகவான் ஜனவரி 23, 2020 அன்று மகர ராசிக்கு பெயர்ந்த பின், நீங்கள் சில நிவாரணத்தை எதிர் பார்க்கலாம். அது வரை திக நிதி பிரச்சணைகள் இருக்கும். ஏதாவது வழக்கு நிலுவையில் இருந்தால், அதன் தீர்ப்பு உங்களுக்கு ஏமாற்றத்தை உண்டாக்கலாம். கிரிமினல் வழக்குகளில் இருந்து வெளி வர முடியாமல் போகலாம்.


மார்ச் 2020 முதல் தொழிலதிபர்களுக்கு சில முன்னேற்றம் ஏற்படும். மார்ச் 2020 வாக்கில் உங்களுக்கு புது ப்ரோஜெக்ட்டுகள் கிடைக்கும். உங்கள் மறைமுக எதிரிகளால் உங்களுக்கு பிரச்சனைகள் இருக்காது. உங்கள் தொழிலில் முன்னேற்றம் பெற புதிதாக பல யோசனைகளை செயல் படுத்துவீர்கள். உங்கள் நிதி பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வுகளை காண்பீர்கள். உங்கள் அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்ற இது நல்ல நேரம்.
ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2020 வரை உள்ள காலகட்டத்தை பயன் படுத்தி நீங்கள் உங்கள் தொழில் குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கலாம். சனி பகவான் உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், உங்கள் குடும்பத்தினர்களின் தேவைகளை கவனிப்பதில் அதிக நேரம் செலவிடுவீர்கள். இதனால், தொழிலை கவனிக்க முடியாமல் போகலாம். இதனால் உங்கள் வளர்ச்சி சற்று பாதிக்கக் கூடும். எனினும், உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், இது உங்களுக்கு ஒரு பிரச்சனையாக இருக்காது.




Prev Topic

Next Topic