![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) குடும்பம் மற்றும் உறவுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | குடும்பம் மற்றும் உறவுகள் |
குடும்பம் மற்றும் உறவுகள்
கடந்த ஒரு ஆண்டாக குரு உங்களுக்கு அதிக வலி மிகுந்த சூழல்களை உண்டாக்கி இருந்திருப்பார். உங்கள மன வருத்தும், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளால் மிக அதிகமாக இருந்திருக்கும். குரு தற்போது உங்கள் ராசியின் 4ஆம் வீட்டிற்கு பெயருவதால், உங்களுக்கு உதவியாக இருப்பார். எனினும். சனி பகவான் எதிர் பாரா விதமாக உங்கள் ராசியின் 5ஆம் வீட்டிற்கு ஜனவரி 23, 2020 அன்று பெயருகிறார். அதனால் உங்கள் சொந்த வாழ்க்கையிலும், உறவுகளிலும் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு சரியான தீர்வு அல்லது நிவாரணம் பெற முடியாமல் போகலாம்.
உங்கள் மனைவி/கணவன், குழந்தைகள் மற்றும் நெருங்கிய குடும்பத்தினர்களுடன் உங்களுக்கு அதிக பிரச்சனைகள் உண்டாகும். நீங்கள் கவனமாக இருந்து, உங்கள் மனைவி /கணவனுடன் ஏற்படும் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். இல்லையென்றால், நீங்கள் தற்காலிகமாக பிரிய நேரிடலாம். குடும்பத்தில் சில அரசியல் ஏற்படும். எதிர் பாரா விதமாக, குரு உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் சஞ்சரித்து, உங்கள் குடும்ப பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவி செய்யமாட்டார். உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்க மாட்டார்கள்.
ஏப்ரல் 2020 முதல் ஜூலை 2020 வரை இருக்கும் காலகட்டத்தை பயன் படுத்தி நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்கலாம். மேலும் சுப காரியங்கள் நிகழ்த்தவும் முயற்சி செய்யலாம். இல்லையென்றால், நீங்கள் உங்கள் பிறந்த சாதக பலனை பார்த்தே செயல்பட வேண்டும். உங்களுக்கு திருமணம் நடக்க இருந்தால், நீங்கள் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். ஏனென்றால், திருமணம் ஆன தம்பதியினரிடம் அன்யுனியம் குறைந்து காணப் படும். மேலும் உங்கள் பிறந்த சாதக பலன் இல்லாமல் குழந்தை பேருக்கு திட்டமிடுவதை தவிர்ப்பது நல்லது.
ஆகஸ்ட் 2020 வாக்கில் நீங்கள் ஒரு தவறான நபருடன் புதிய உறவை உண்டாக்கிக் கொள்ளும் வாய்ப்பு உளது. இந்த புதிய உறவு உங்கள் மன நிம்மதியை எடுத்து விடக் கூடும். உங்களுக்கு குடும்பத்தினர்களுடன் ஏதாவது வழக்குகள் அல்லது சட்ட பிரச்சனைகள் இருந்தால், குறிப்பாக, விவாகரத்து, ஜீவனாம்சம், குழந்தை காவல் அல்லது சொத்து குறித்த பிரச்சனைகள் இருந்தால், அது உங்களுக்கு சாதகமாக இருக்காது. மேலும் உங்கள் மன நிம்மதியையும் அது எடுத்து விடும்.
Prev Topic
Next Topic