குரு பெயர்ச்சி (2019 - 2020) நிதி / பணம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kanni Rasi (கன்னி ராசி)

நிதி / பணம்


சனி பகவான், குரு, ராகு மற்றும் கேது நல்ல நிலையில் சஞ்சரிக்காததால், உங்கள் நிதி நிலை கடந்த 12 மாதங்கள் பாதிக்கப்பட்டிருக்கும். அதிகரிக்கும் கடனால் நீங்கள் பீதி அடையும் நிலைக்கு சென்றிருப்பீர்கள். குரு உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் கடன் சுமையை குறைக்க உதவுவார். அதனால், நீங்கள் இந்த குரு பெயர்ச்சி காலத்தில் கடன் நிதி மறு பரிசீலனை செய்ய முயற்சி செய்யலாம். எனினும் உங்களுக்கு தேவையற்ற பயணம், எதிர் பாராத மருத்துவ செலவுகள், சட்ட பிரச்சனைகள் மற்றும் வாகனம் அலல்து வீட்டு பராமரிப்பு போன்றவற்றிக்காக அதிக செலவு செய்ய வேண்டிய சூழல் வரலாம். அதிகரிக்கும் செலவால், உங்களால் சேமிக்க முடியாமல் போகலாம். உங்கள் பண வரத்தும் பாதிக்கப்படலாம்.
உங்கள் குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2020 வரை நல்ல உதவி கிடைக்கும். நீங்கள் இந்த காலகட்டத்தை பயன்படுத்தி உங்கள் நிதி நிலையை உயர்த்திக் கொள்ள முயற்சி செய்யலாம். உங்கள் பிறந்த சாதக பலன் இல்லாமல், புது வீடு வாங்க முயற்சி செய்வதை தவிர்பப்து நல்லது. நீங்கள் பணத்தை இழக்க மாட்டீர்கள் என்றாலும், நீங்கள் வாங்கும் வீடு உங்களுக்கு அதிக பிரச்சனையைத் தரக் கூடும். சனி பகவான் உங்கள் ராசியின் 5ஆம் வீட்டிற்கு ஜனவரி 2020 வாக்கில் பெயருவதால், நீங்கள் சில தீய பழக்கங்களுக்கு அடிமையாகலாம். அதனால் சூதாட்டம் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.




Prev Topic

Next Topic