![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) உடல் நலம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | உடல் நலம் |
உடல் நலம்
முக்கிய கிரகங்கள் நல்ல நிலையில் இல்லாததால், சமீப கடந்த நாட்களில் நீங்கள் உடல் நல பிரச்சனையை மற்றும் உளவியல் பிரச்சனைகளால் அதிகம் இன்னல்களை சந்தித்திருந்திருப்பீர்கள். குரு உங்கள் ராசியின் 4ஆம் வீட்டிற்கு பெயர்ந்து உங்கள் பிரச்சனைக்கு மூல காரணத்தை கண்டறிய உதவி செய்வார், மேலும் அந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு பெறவும் உதவுவார். சரியான மருந்து கிடைப்பதாலும், சரியான உணவு பழக்கங்களாலும், உங்கள் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
எனினும், சனி பகவான் மற்றும் கேது இணைந்து ஜனவரி 23, 2020 வரை உங்களுக்கு பதற்றத்தை உண்டாக்கக் கூடும். குரு உங்கள் ராசியின் 5ஆம் வீடான பூர்வ புண்ய ஸ்தானத்திற்கு அதி சரமாய் ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2020 வரை பெயர்ந்த உடன், நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்தை மீண்டும் பெறுவீர்கள். 7 ஆண்டுகளுக்கு பிறகு குரு உங்கள ஜென்ம ராசியை இந்த மூன்று மாதம் காலம் பார்வை இடுகிறார். உடம்பில் உள்ள கொழுப்பு சத்து, சர்க்கரை அளவு மற்றும் இரத்த கொதிப்பு ஆகியவற்றை சீரான அளவிற்கு கொண்டு வர உங்கள் உடல் விரைவாக ஒத்துழைக்கும். நீங்கள் எளிதான மருந்துகள் மற்றும் உடற் பயிற்சி செய்தாலே, நல்ல ஆரோக்கியத்தைப் பெறலாம்.
ஜூலை 2020 முதல் அக்டோபர் 2020 வரை சனி பகவான் உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரித்து நீங்கள் இயற்கையாகவே அதிக உணர்ச்சி வசப்படுபவராக இருக்க செய்வார். இதனால் நீங்கள் மனதளவில் அதிக பலவீனமாக இருப்பீர்கள், இந்த நிலை குறிப்பாக உங்கள் சொந்த வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளால் உண்டாகும். நீங்கள் வெளி நாட்டில் வசிப்பவராக இருந்தால், அல்லது உங்கள் குடும்பத்தினரை விட்டு தொலை தூரத்தில் இருந்தால், அதன் தாக்கம் அதிகமாக இருக்கும்/ உங்கள் பிறந்த சாதக பலன் பலவீனமாக இருந்தால் நீங்கள் தீய பழக்கங்களுக்கு அடிமையாக நேரிடலாம்.
Prev Topic
Next Topic