![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) காதல் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | காதல் |
காதல்
சனி பகவான் மற்றும் கேது இணைந்து உங்கள் ராசியின் 4ஆம் வீட்டிலும், குரு 3ஆம் வீட்டிலும் சஞ்சரித்து, நீங்கள் விரும்புபவருடன் சண்டை மற்றும் வாக்குவாதங்களை ஏற்படுத்தி இருந்திருப்பார்கள். தற்போது குரு உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு எந்த நிவாரணத்தையும் தரமாட்டார். மாறாக, உங்கள் பிரச்சனைகளை பெப்ரவரி 2020 முதல் அதிகமாக ஆக்கக் கூடும்.
நீங்கள் விரும்புபவருடன் நல்ல உறவை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், அதற்கு உங்கள் பிறந்த சாதகம் உதவியாக இருக்க வேண்டும். மேலும் அவருடன் நீங்கள் அதிக உடைமையோடு இருப்பதால், பிரச்சனைகள் அதிகரிக்க வாய்புகள் உள்ளது. இதனோடு, புதிதாக ஒருவர் உங்கள் இருவருக்கும் இடையே வருவதாலும், உங்கள் பிரச்சனை அதிகமாகக் கூடும். இந்த உறவு உங்களுக்கு சரி வராது என்றும் நீங்கள் நினைப்பீர்கள.
நீங்கள் குழந்தை பேரு பெற காத்திருந்தால், அது உங்கள் பிறந்த சாதக பலன் இருந்தால் மட்டுமே கிடைக்கும். IVF மற்றும் IUI போன்ற மருத்துவ சிகிச்சைகள் நீங்கள் எதிர் பார்த்த பலனை உங்களுக்கு தராமல் போகலாம். ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2020 வரை உங்கள் காதல் வாழ்க்கைக்கு நல்ல நேரமாக இருக்கும். எனினும், இந்த காலகட்டம் உங்களை முதலில் காதலில் விழ வைத்து பின் பல பிரச்சனைகளில் ஜூலை 2020 முதல் நவம்பர் 2020 வரை சிக்க வைக்கும் விதத்தில் மாறி விடலாம்.
Prev Topic
Next Topic