குரு பெயர்ச்சி (2019 - 2020) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kanni Rasi (கன்னி ராசி)

கண்ணோட்டம்


கடந்த வருடம், குரு, சனி பகவான், ராகு மற்றும் கேது ஆகிய எந்த முக்கிய கிரகங்களும் நல்ல இடத்தில் சஞ்சரிக்கவில்லை. நீங்கள் அதிக மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் கண்டிருப்பீர்கள். மேலும் கடுமையான உடல் நல பிரச்சனையை, உத்தியோகத்தில் பிரச்சனை, குடும்பத்தில் பிரச்சனை அல்லது நிதி பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கும். குரு தற்போது உங்கள் ராசியின் 4ஆம் வீட்டிற்கு பெயருவது சிறப்பான நிலையை காட்டவில்லை. எனினும், கடந்த வருடத்தை ஒப்பிடும் போது, இது சற்று நன்மையைத் தரக்கூடியதாக இருக்கும்.
அடுத்த வருடம் பிரச்சனைகளின் தாக்கம் குறைந்து கொண்டே போகும். சனி பகவான் உங்கள் ராசியின் 5ஆம் வீட்டிற்கு ஜனவரி 23, 2020 அன்று பெயருகின்றார். உங்களுக்கு நிதி பிரச்சனைகள் மற்றும் உத்தியோகத்தில் இருந்து நிவாரணம் கிட்டைக்கும். உங்கள் உடல் உபாதைகளில் இருந்து வெளி வருவீர்கள். உங்கள் உத்தியோகம் மற்றும் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.


எனினும், எந்த நிவாரணமும் இல்லாமல், குடும்பத்தில் பிரச்சனைகள் தொடரக் கூடும். குறிப்பாக உங்கள் உறவுகளுடன் உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் அதிகமாகும். கேது உங்கள் ராசியின் 3ஆம் வீட்டிற்கு பெயர்ந்து செப்டம்பர் 2020 வாக்கில் அதிக நிவாரணத்தைக் கொடுப்பார். மொத்தத்தில் நீங்கள் இந்த குரு பெயர்ச்சியில் கலவையான பலன்களை எதிர் பார்க்கலாம்.


Prev Topic

Next Topic