![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) (மூன்றாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | மூன்றாம் பாகம் |
ஜூலை 01, 2020 முதல் செப்டம்பர் 13, 2020 வரை கலவையான பலன்கள் (55 / 100)
குரு செப்டம்பர் 13, 2020 அன்று தனுசு ராசியில் வக்கிர கதி அடைகின்றார். கடந்த சில மாதங்கள் உங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் தற்போது குறையும். நீங்கள் வரும் நாட்களில் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். எந்த உடல் நல பிரச்சனைகளும் இருக்காது. உங்கள் உத்தியோகம் குறித்த விடயங்கள் ஓரளவிற்காவது சிறப்பாக இருக்கும். உங்கள் நிதி நிலை சுமாராக இருக்கும். இந்த காலகட்டத்தில் பயணம் உங்களுக்கு கலவையான பலன்களைத் தரும்.
உங்கள் சொந்த வாழ்க்கை மற்றும் உறவுகள் பாதிக்கப்படலாம். இந்த நேரத்தில் நீங்கள் தவறான நபரை நோக்கி ஈர்க்கப் படலாம். உங்கள் சொந்த வாழ்க்கையில் அதிகரிக்கும் பிரச்சனைகள் உங்கள் மன நிம்மதியை குறைக்கும். இதனால், உங்களால் உத்தியோகத்தில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். அதனால் பெரிதாக முன்னேற்றத்தை உங்களால் உத்தியோகத்தில் காண முடியாமல் போகலாம். மேலும் பணம் ஈட்டுவதில் உங்களுக்கு ஆர்வமும் குறையும். மாறாக, உங்கள் மனதில் தேவையற்ற பயமும், பதற்றமும் உண்டாகும். மேலும் நீங்கள் தீய பழக்கங்களுக்கு அடிமையாகலாம். சுதர்சன மகா மந்திரம் மற்றும் ஆதித்ய ஹ்ருதயம் கேட்பதால் சற்று ஆறுதலாக இருக்கும். பங்கு சந்தை நீங்கள் எதிர் பார்த்த லாபத்தை தராமல் போகலாம்.
Prev Topic
Next Topic