குரு பெயர்ச்சி (2019 - 2020) வேலை மற்றும் உத்தியோகம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kanni Rasi (கன்னி ராசி)

வேலை மற்றும் உத்தியோகம்


2019ல் உங்கள் உத்தியோகம் குறித்த விடயங்கள் மோசமாக இருந்திருக்கும். உங்களுடன் வேலை பார்ப்பவர்களுடன் பிரச்சனைகள் உண்டாகி நீங்கள் உங்கள் வேலையை இழந்திருந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. குரு தற்போது உங்கள் ராசியின் 4ஆம் வீட்டிற்கு பெயர்ந்தாலும், உடனடியாக உதவியை தற்போது எதிர் பார்க்க முடியாது/ எனினும், நீண்ட கால அடிப்படையில், குரு உங்களுக்கு உதவியாக இருப்பார். சமீப கடந்த நாட்களில் உங்களுக்கு அலுவலகத்தில் நடந்த விடயங்களை ஜீரணிக்க, சில மாதங்கள் உங்களுக்குத் தேவைப் படலாம்.
பெப்ரவரி 2020 முதல் உங்கள் அலுவலகத்தில் இருக்கும் அரசியல் குறையும். நல்ல முன்னேற்றம் தரக்கூடிய ப்ரொஜெக்டில் நீங்கள் வேலை பார்க்க வாய்ப்பு கிடைக்கும். உங்கள் மேலாளர் உங்கள் வேலையை அங்கீகரிப்பார். அலுவலகத்தில் ஏற்படும் மாற்றங்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால், நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். எனினும், உங்களுடன் வேலை பார்க்கும் யாரிடமும் அதிக நேர்க்கதோடு இருக்காமல் இருப்பது நல்லது. து உங்கள் வாழ்க்கையை மோசமாக்கி விடக் கூடும்.


2020 உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புகள் இருந்தாலும், உங்களது அவசர முடிவால், நீங்கள் அதனை இழக்க நேரிடலாம். உங்கள சொந்த வாழ்க்கையில் அதிக பிரச்சனைகள் இருப்பதால், உங்கள் உத்தியோகத்திலும், நிதி நிலையிலும் வளர்ச்சியை உண்டாக்க முடியாமல் மற்றும் அதற்கான ஆர்வமும் இல்லாமல் இருப்பீர்கள். செப்டம்பர் 2020 முதல் நவம்பர் 2020 வரை உங்கள் மன நிலையை திடமாக வைத்துக் கொண்டு, எந்த மன உளைச்சலுக்கும் ஆலாகமால் பார்த்துக் கொள்ள வேண்டும்.


Prev Topic

Next Topic