குரு பெயர்ச்சி (2020 - 2021) தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kumbha Rasi (கும்ப ராசி)

தொழில் மற்றும் இரண்டாம் வருமானம்


சாதகமான குரு மற்றும் சாதகமற்ற சனி பகவாநாள் கடந்த ஒரு ஆண்டு காலம், தொழிலதிபர்கள் கலவையான பலன்களைப் பெற்றிருப்பார்கள். குரு மற்றும் சனி பகவான் அடுத்த 18 மாதங்களுக்கு உங்களுக்கு எதிராகவே செயல்படுவார்கள். இதனால் உங்கள் போட்டியாளர்களிடம் நீங்கள் உங்களுக்கு கிடைத்த நீண்ட கால ப்ரோஜெக்ட்டை இழக்க நேரிடலாம். உங்கள் மறைமுக எதிரிகள் உங்கள் வளர்ச்சியை பாதிக்கும் வகையில் உங்களுக்கு எதிரான சதிகளை செய்வார்கள்.
உங்கள் தொழிலில் எந்த ஒரு விரிவு படுத்தும் முயற்சிகளையும் தவிர்த்து விடுவது நல்லது. பண வரத்து மிகவும் மோசமாக பாதிக்கப்படலாம். உங்கள் வங்கிக் கடன் ஒப்புதல் பெறாமல் போகலாம். முடிந்த வரை பணம் கடன் வாங்குவது அல்லது கடன் கொடுப்பது போன்றவற்றை தவிர்த்து விடுவது நல்லது. உங்களிடம் வேலை பார்க்கும் ஊழியர்கள் உங்கள் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடி விடக் கூடும். மேலும் வருமான வரி பிரச்சனைகள் மற்றும் சட்ட பிரச்சனைகள் உண்டாகலாம். மேலும் மோசமான சூழலில் உங்கள் தொழிலை தொடர்ந்து நடத்த நீங்கள் உங்கள் சொத்துக்களை விற்று பண வரத்தை உண்டாக்க முயற்சி செய்வீர்கள்.


சுய தொழில் புரிவோர்கள், ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள், இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள் மற்றும் கமிசன் ஏஜெண்டுகளுக்கு இது ஏற்ற நேரமாக இருக்காது. நீங்கள் நீண்ட காலத்திற்கு உங்கள் தொழிலை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றால், அதற்கு உங்கள் பிறந்த சாதக பலன் நன்றாக இருக்க வேண்டும். சாதகமான நேரம் உள்ள உங்கள் மனைவி/கணவன் அல்லது குழந்தைகளின் பெயரை உங்கள் தொழிலில் இணைத்துக் கொள்ளலாம், அப்படி இல்லையென்றால், சோதிடரை அணுகி ஆலோசனைப் பெற்று அதற்கேற்றவாறு நடந்து கொள்ளலாம்.


Prev Topic

Next Topic