![]() | குரு பெயர்ச்சி (2020 - 2021) தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் |
தொழில் மற்றும் இரண்டாம் வருமானம்
அணைத்து முக்கிய கிரகங்களும் சாதகமற்ற நிலையில் சஞ்சரிபதால், தொழிலதிபர்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் பண வரத்து பாதிக்கப்படலாம். ராகு மற்றும் கேது உங்களுக்கு அதிக போட்டியை தொழிலில் உண்டாக்கக் கூடும். சனி பகவான் உங்களுக்கு மறைமுக எதிரிகளை உண்டாக்குவார். குரு உங்கள் வளர்ச்சியை முற்றிலுமாக பாதித்து உங்களுக்கு கசப்பான அனுபவங்களை உண்டாக்கக் கூடும். நீங்கள் மிகவும் நம்பிக்கை வைத்தவர்கள் உங்களை பண விடயங்களில் ஏமாற்றக் கூடும்.
உங்கள் வாடிக்கையாளர் அல்லது பங்குதாரருடன் உங்களுக்கு சட்ட பிரச்சனைகள் ஏற்படக் கூடும். உங்கள் தொழிலை விரிவுபடுத்த இது ஏற்ற நேரம் இல்லை. விளம்பரம் செய்வதற்கு பணத்தை செலவு செய்வதை தவிர்த்து விடுவது நல்லது. அது உங்களுக்கு எந்த பலனையும் தராது. உங்கள் தொழில் அரசு அறிக்கைகளால் பாதிக்கப்படலாம். சுயதொழில் புரிவோர்கள் மற்றும் கமிசன் ஏஜெண்டுகள் எந்த லாபமும் இல்லாமல் இந்த குரு பெயர்ச்சி காலகட்டத்தில் கடுமையான நேரத்தை சந்திப்பார்கள்.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic