குரு பெயர்ச்சி (2020 - 2021) கல்வி பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி)

கல்வி


மாணவர்களுக்கு இது ஒரு சவால் நிறைந்த மாதமாக இருக்கும். வீட்டுப் பாடம் செய்வதிலும் வகுப்பிற்கு செல்வதற்கும் உங்களுக்கு ஆர்வம் இல்லாமல் இருக்கும். நீங்கள் அடுத்த ஆண்டு இளநிலை அல்லது முதுநிலை பட்டம் படிக்கப்போவராக இருந்தால், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். நல்ல மதிப்பென்கள் பெற மிகக் கடினமாக உழைக்க வேண்டும். இல்லையென்றால், அடுத்த 2021ஆம் ஆண்டு உங்களுக்கு ஏமாற்றத்தையே தரும்.
முதுநிலை பட்டம் அல்லது Ph.D படிக்கும் மாணவர்களுக்கு பேராசிரியருடன் கருத்துவேறுபாடுகள் ஏற்படக் கூடும். முடிந்த வரை பொறுமையாக செல்வது நல்லது, இல்லையென்றால், உங்கள் ஆய்வறிக்கை ஒப்புதல் பெறாமல் போக வாய்ப்பும் உள்ளது. மே 2021 வரை காத்திருந்து அதன் பின்னர் உங்கள் ஆய்வறிக்கையை சமர்பிப்பது நல்ல யோசனையாக இருக்கும். விளையாட்டில் கவனம் குறைவாக இருப்பதால், உங்களால் சரியாக செயல்பட முடியாமல் போகலாம்.



Prev Topic

Next Topic