![]() | குரு பெயர்ச்சி (2020 - 2021) குடும்பம் மற்றும் உறவுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | குடும்பம் மற்றும் உறவுகள் |
குடும்பம் மற்றும் உறவுகள்
குரு உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரித்ததால் கடந்த சில மாதங்கள் நீங்கள் சிறப்பான பலன்களைப் பெற்றிருந்திருப்பீர்கள். குரு ஐந்தாம் பார்வையாய் ராகுவை பார்வை இடுவதால், குடும்பத்தில் தேவையற்ற சண்டைகளும், வாக்குவாதங்களும் ஏற்படக் கூடும். நீங்கள் உங்கள் வார்த்தைகளை கவனித்தே யாரிடமும் பேச வேண்டும். நீங்கள் பேசும் விதத்தில் உங்கள் குடும்பத்தில் பிரச்சனைகள் உண்டாகக் கூடும்.
உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்க மாட்டார்கள். திருமணம், புது மனை புகு விழா, ஆண்டு விழா போன்ற சுப காரியங்கள் செய்யும் யோசனைகளை தவிர்த்து விடுவது நல்லது. உங்கள் குடும்பத்திலும், சமூக வட்டாரத்திலும், உங்கள் முக்கியத்துவத்தை நீங்கள் இழக்க நேரிடலாம். ஆனால் இந்த குரு பெயர்ச்சி 4.5 ஆண்டுகளான ஒரு குறுகிய காலகட்டத்திற்கு மட்டுமே இருப்பதால் விடயங்கள் உங்கள் கட்டுபாட்டை விட்டு போகாது.
Prev Topic
Next Topic