குரு பெயர்ச்சி (2020 - 2021) காதல் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி)

காதல்


குரு உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் கடந்த மாதங்களில் சஞ்சரித்ததால் உங்கள் காதல் வாழ்க்கை சிறப்பாக இருந்திருக்கும். தற்போது குரு உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டிற்கு பெயருவது சிறப்பான செய்தி இல்லை. நீங்கள் விரும்புபவருடன் உங்களுக்கு தேவையற்ற வாக்குவாதங்கள் மற்றும் சண்டைகள் ஏற்படக் கூடும் என்பதால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் மன நிம்மதி பாதிக்கக் கூடும். செவ்வாய் இந்த குரு பெயர்ச்சி காலம் முழுவதும் சாதகமற்ற நிலையில் சஞ்சரிப்பார். இதனால் உங்களுக்கு தேவையற்ற பயம் மற்றும் பதற்றம் ஏற்படக் கூடும். புது உறவைத் தொடங்க இது ஏற்ற நேரம் இல்லை.
சனி பகவான் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டை பார்வை இடுவது சிறப்பாக இல்லை. நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், ஏப்ரல் 2021 வரை காத்திருப்பது நல்லது. அதன் பிறகு உங்களுக்கு ஏற்ற வரன் கிடைத்து உங்களுக்கு திருமணம் நடக்கும். நீங்கள் விரும்புபவரை விட்டு பிரிந்திருந்தால், பெற்றோர்கள் நிச்சயிக்கும் திருமணத்தை செய்து கொள்வது நல்லது. திருமணம் ஆன தம்பதியினர் அன்யுனியம் குறைந்து காணப்படுவார்கள். குழந்தை பேருக்கு திட்டமிட இது ஏற்ற நேரம் இல்லை.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic