குரு பெயர்ச்சி (2020 - 2021) வேலை / உத்தியோகம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி)

வேலை / உத்தியோகம்


குரு உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்கள் உத்தியோகம் குறித்த விடயங்களுக்கு சாதகமாக இல்லை. சனி பகவான் மற்றும் குரு இணைந்து சஞ்சரித்து உங்களுக்கு உத்தியோகத்தில் அழுத்தம் மற்றும் பதற்றத்தை அதிகமாக தரக் கூடும். கடுமையாக வேலை இருக்கும். நீங்கள் நிர்வாகத் துறையில் இருந்ஹ்டால், உங்கள் உயர் அதிகாரிகளுடன் அதிக பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். உங்களை பற்றிய ரிப்போர்ட் உங்களுக்கு சாதகமான நல்ல கருத்துக்களோடு வராமல் போகலாம். இதனால் நீங்கள் உங்கள் பதவியை தக்க வைத்துக் கொள்வதில் பிரச்சனைகள் ஏற்படலாம்.
ஆனால் நீங்கள் உங்கள் உத்தியோகத்தை இழக்க மாட்டீர்கள். தற்போது இருக்கும் கிரகங்களின் அமைப்பு உங்களுக்கு பதற்றமான நிலையை உண்டாக்கினாலும், நீங்கள் உங்கள் உத்தியோகத்தை இழக்க மாட்டீர்கள். நீங்கள் ஒப்பந்தம் ரீதியாக வேலை பார்கின்றீர்கள் என்றால், அது மேலும் நீட்டிக்கப்படும். ஆனால், இந்த குரு பெயர்சியில் அது நிரந்தரமாகும் என்று எதிர்பார்க்க முடியாது. புது வேலை வாய்ப்புகளுக்கு முயற்சி செய்வதை தவிர்த்து விடுவது நல்லது. பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. ஆனால், உங்களுக்கு சம்பள உயர்வும், போனசும் கிடைக்கும்.


வெளிநாட்டிற்கு இடம்பெயருவது நல்ல யோசனையாக இருக்காது. இடமாற்றம், வெளிநாட்டிற்கு குடிபெயருவது, அல்லது குடியேற்ற பலன்கள் போன்றவற்றை உங்கள் நிறுவனத்தில் இருந்து எதிர்பார்க்க முடியாது. மொத்தத்தில் உங்கள் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொண்டு, உங்கள் உத்தியோகத்தில் இருக்கும் இந்த கடுமையான காலகட்டத்தை கடக்க முயற்சி செய்ய வேண்டும்.


Prev Topic

Next Topic