குரு பெயர்ச்சி (2020 - 2021) தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி)

தொழில் மற்றும் இரண்டாம் வருமானம்


குரு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு அதிக போட்டிகளையும், நிதி இழப்புகளையும் சமீப காலத்தில் ஆகஸ்ட் 2020 முதல் உங்களுக்கு உண்டாக்கி இருந்திருப்பார். ராகு உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் செப்டம்பர் 25, 2020 முதல் சஞ்சரித்து உங்களுக்கு சில உதவிகளை புரிவார். தற்போது குரு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டிற்கு பெயர்ந்து உங்களுக்கு அதிர்ஷ்டத்தை பல மடங்கு அதிகரிப்பார். உங்கள் போட்டியாளர்களை எதிர்த்து நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள்.
உங்கள் நிதி பிரச்சனைகளில் இருந்து வெளி வருவீர்கள். புது முதலீட்டாளர்கள் அல்லது வங்கிக் கடன் மூலமாக உங்களுக்கு நிதி கிடைக்கும். நிதி மறுபரிசீலனை செய்யும் விடயங்களில் வெற்றிப் பெறுவீர்கள். உங்கள் நிர்வாக செலவுகள் குறையும். உங்களுக்கு புது ப்ரோஜெக்ட்டுகளும் கிடைக்கும். இதனால் உங்கள் பண வரத்து அதிகரிக்கும். மார்ச் 31, 2021 வரை நீங்கள் பெரும் அளவு வெற்றியையும், லாபத்தையும் பெறுவீர்கள்.



ஏப்ரல் 2021 முதல் உங்களுக்கு நேரம் நீண்ட காலத்திற்கு சாதகமாக இல்லை என்பதால் உங்கள் பிறந்த சாதக பலனை பார்த்தே நீங்கள் எந்த முயற்சியையும் எடுக்க வேண்டும். உங்கள் மகா தசை சாதகமாக இல்லை என்றால், உங்கள் தொழிலை மார்ச் 31, 2021க்கு முன் நல்ல லாபத்திற்கு விற்று விடுவது நல்லது. அப்படி இல்லையென்றால், உங்கள் மனைவி/கணவன் அல்லது குழந்தைகள், என்று யாருக்கு நேரம் சிறப்பாக உள்ளதோ அவர்கள் பெயருக்கு மாற்றி விடுவது நல்லது.




Prev Topic

Next Topic