![]() | குரு பெயர்ச்சி (2020 - 2021) குடும்பம் மற்றும் உறவுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | குடும்பம் மற்றும் உறவுகள் |
குடும்பம் மற்றும் உறவுகள்
ஜனவரி 23, 2020 முதல் உங்களுக்கு கண்டக சனி நடைபெறுகின்றது. இதனால் உங்கள் மனைவி/கணவனுடன் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்பட்டிருந்திருக்கும். தற்போது குரு உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை ஒன்றன் பின் ஒன்றாக சரி செய்வார். குரு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரித்து நீச்ச பங்க ராஜ யோகத்தை உண்டாக்கி கண்டக சனியின் தாக்கத்தை குறைப்பார். நீங்கள் உத்தியோகம் காரணமாக உங்கள் குடும்பத்தினர்களை விட்டு பிரிந்திருந்தால், மீண்டும் அவர்களுடன் சேருவீர்கள்.
உங்கள் மனைவி/கணவன் மற்றும் குடும்பத்தினர்களுடன் உங்கள் பிரச்சனைகளைப் பற்றி நீங்கள் பேசுவீர்கள். உங்கள் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைக் காண்பீர்கள். குடும்பத்தினர்கள் மீண்டும் ஒன்று சேருவதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து நல்ல மதிப்பைப் பெறுவீர்கள். குரு விரைவான 3௦ கோணத்தை முழுமையாக மகர ராசியில் கடப்பதால், நீங்கள் விரைவாகவே நேர்மறைப் பலன்களைப் பெறுவீர்கள்.
உங்கள் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் நிச்சயிக்க இது நல்ல நேரம். உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை வரும் நாட்களில் கேட்பார்கள். திருமண நிச்சயம், திருமணம், புது மனை புகு விழா போன்ற சுபகாரியங்களை நடத்துவீர்கள். ஆனால் மார்ச் 31, 2021-க்கு முன் சுப காரியங்களை நடத்தி விட திட்டமிடுங்கள். ஏனென்றால் குரு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிற்கு ஏப்ரல் 5, 2021 அன்று பெயர்ந்ததும் அதிக சவால்களை நீங்கள் சந்திக்க நேரிடலாம்.
Prev Topic
Next Topic