![]() | குரு பெயர்ச்சி (2020 - 2021) நிதி / பணம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | நிதி / பணம் |
நிதி / பணம்
குரு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு அதிக கடனை அதிகரித்து நீங்கள் பீதி அடையும் நிலையை உண்டாக்கி இருந்திருப்பார். தற்போது குரு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டிலும் மற்றும் ராகு 11ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்கள் பண வரத்தை அதிகரிப்பார்கள். நீங்கள் உங்கள் கடனை விரைந்து அடைப்பீர்கள். உங்கள் கடனை நிதிமருபரிசீலனை செய்து கடன் சுமையை குறைத்துக் கொள்ள இது நல்ல நேரம். உங்கள் மாதாந்திர நிதித் தேவைகள் குறைவதால் உங்களுக்கு குறிப்பிடத்தக்க நிவாரணம் கிடைக்கும்.
குரு மற்றும் சனி பகவான் இனிந்து நீச்ச பங்க ராஜ யோகத்தை உண்டாக்குவதால் உங்கள் மருத்துவ செலவுகள் குறையும். உங்கள் எதிர்காலத்திற்காக நீங்கள் பணத்தை சேமிப்பீர்கள். புது வீடு வாங்கி குடி பெயர இது நல்ல நேரம். இருப்பினும், நீங்கள் புது வீடு கட்ட வேண்டும் என்றால், அதற்கு உங்கள் பிறந்த சாதகம் பலமாக இருக்க வேண்டும். ஏனென்றால், ஏப்ரல் 5, 2021 முதல் நீங்கள் சோதனை காலத்தில் இருப்பீர்கள்.
நவம்பர் 2௦, 202௦ முதல் ஏப்ரல் 5, 2021 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் சிறப்பான முன்னேற்றத்தை காண்பீர்கள். மார்ச் 2021 வரை நீங்கள் மகிழ்ச்சியான பலன்களைப் பெறுவீர்கள். மார்ச் 3௦, 2021க்கு முன் உங்கள் நிதி நிலையில் நீங்கள் செட்டிலாகி விட முயற்சி செய்யுங்கள், ஏனென்றால், அதன் பிறகு 2021 ஆண்டின் வரவிருக்கும் மாதங்கள் உங்களுக்கு சிறப்பாக இல்லை.
Prev Topic
Next Topic