![]() | குரு பெயர்ச்சி (2020 - 2021) வழக்கு பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | வழக்கு |
வழக்கு
சனி பகவான் உங்கள் ராசியின் 7ஆம் வீட்டிலும், குரு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்களுக்கு வருமான வரி மற்றும் சட்ட பிரச்சனைகளை ஜனவரி 2020 முதல் அக்டோபர் 2020 வரை உண்டாக்கி இருந்திருக்கக் கூடும். குரு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டிற்கு நவம்பர் 2௦, 2020 அன்று பெயருவதால் உங்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். விடயங்கள் உங்களுக்கு சாதகமான திசையில் நகரும். நவம்பர் 2020 முதல் மார்ச் 2021 வரை இருக்கும் காலகட்டத்தை நீங்கள் பயன்படுத்திக் கொண்டு சாதகமான பலன்களைப் பெற முயற்சி செய்யுங்கள். நீதிமன்றம் செல்லாமல் உங்கள் பிரச்சனைக்கு தீர்வு/செட்டில்மென்ட் பெற முயற்சி செய்யுங்கள்.
ஏப்ரல் 2021 முதல் விடயங்கள் உங்களுக்கு எதிராக மாறும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் மீது தவறான குற்றச்சாட்டும், கிரிமினல் வழக்குகளும் ஏப்ரல் 2021 முதல் அஷ்டம குரு தொடங்கியதும் உண்டாகலாம். அதனால் மார்ச் 31, 2021-க்கு முன்னதாகவே நிலுவையில் இருக்கும் வழக்குகளில் இருந்து வெளி வந்து விட முயற்சி செய்யுங்கள்.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic