குரு பெயர்ச்சி (2020 - 2021) (இரண்டாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி)

பெப்ரவரி 21, 2020 முதல் ஏப்ரல் 05, 2021 வரை விண்ணைத்தொடும் லாபம் (90 / 100)


செவ்வாய் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் ராகுவுடன் இணைந்து சஞ்சரிப்பதால், உங்கள் தன்னம்பிக்கை அதிகரித்து, நேர்மறை சக்திகளையும் பெறுவீர்கள் சக்தி வாய்ந்த குரு மங்கள யோகம் உங்களுக்கு ராகுவுடன் இணைந்து நடப்பதால், விண்ணைத்தொடும் லாபம் உண்டாகும். சுப காரியங்கள் நிகழ்த்துவதில் மகிழ்ச்சி அடைவீர்கள். திருமணம் ஆன தம்பதியினர் நல்ல அன்யுனியத்தோடு இருப்பார்கள். உங்கள் குடும்பத்தில் குழந்தை பிறப்பதால், அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், உங்களுக்கு ஏற்ற வரன் கிடைத்து திருமணமும் நடக்கும்.
நீண்ட காலமாக பதவி உயர்வுக்காக காத்திருந்தவர்களுக்கு இந்த காலகட்டத்தில் நல்ல வாய்புகள் கிடைக்கும். உங்கள் வேலை பளு மற்றும் பதற்றம் குறையும். வெளிநாட்டிற்கு இடமாற்றம் செய்ய இது நல்ல நேரம். புது வீட்டிற்கு குடி பெயருவதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். சொத்துக்களில் முதலீடுகள் செய்யவும் இது சிறப்பான நேரமாக உள்ளது. பண வரத்து அதிகரிப்பதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நல்ல சேமிப்பு உண்டாவதால் நீங்கள் அதிக பாதுகாப்போடு இருப்பதாக உணருவீர்கள். பங்கு சந்தை வர்த்தகம் உங்களுக்கு நல்ல லாபம் தருவதாக இருக்கும். ஆப்சன் வர்த்தகம் மற்றும் சூதாட்டம் போன்றவற்றில் உங்கள் அதிர்ஷ்டத்தை நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.


ஆனால் உங்களுக்கு கிடைத்துள்ள இந்த அதிர்ஷ்டம் ஏப்ரல் 5, 2021 வரையிலான குறுகிய காலத்திற்கு மட்டுமே என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். அதன் பிறகு, ஏப்ரல் 5, 2021 முதல் நீங்கள் சோதனை காலத்தில் இருப்பீர்கள். அதனால் உங்கள் வாழ்க்கையில் ஏப்ரல் 5, 2021க்குள் செட்டிலாகி விட முயற்சி செய்யுங்கள்.



Prev Topic

Next Topic