![]() | குரு பெயர்ச்சி (2020 - 2021) வர்த்தகம் மற்றும் முதலீடுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | வர்த்தகம் மற்றும் முதலீடுகள் |
வர்த்தகம் மற்றும் முதலீடுகள்
பங்கு சந்தையில் நீண்ட கால முதலீடுகள் செய்பவர்கள் மற்றும் ஸ்பெகுலேடிவ் வர்த்தகம் செய்பவர்கள் ஆகஸ்ட் 13, 2020 முதல் நவம்பர் 2௦, 2020 வரை அதிக பணத்தை இழந்திருப்பார்கள். அதிகப்படியான நிதி இழப்புகள் உங்களுக்கு சமீபத்தில் ஏற்பட்டதால் நீங்கள் பீதி அடையும் நிலையில் இருந்திருப்பீர்கள். நவம்பர் 21, 2020 முதல் குரு மற்றும் ராகு ஐந்தாம் பார்வையாய் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை உண்டாகுவதால் நிதி நிலையில் முன்னேற்றத்தை காண்பீர்கள். குரு உங்கள் ராசியின் 7ஆம் வீடான களத்திற ஸ்தானத்தில் சஞ்சரிபதால், குருவின் பலத்தோடு நீங்கள் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்புகளில் இருந்து வெளி வருவீர்கள்.
உங்கள் வளர்ச்சி மற்றும் நிவாரணத்தின் வேகம் உங்கள் பிறந்த சாதகத்தை பொறுத்தே உள்ளது. மார்ச் 2021 இரண்டாம் வாரத்தை கடந்ததும், நீங்கள் பங்கு சந்தை வர்த்தகத்தில் ரிஸ்க் எடுப்பதை தவிர்த்து விட வேண்டும். ஏப்ரல் 5, 2021 முதல் பங்கு சந்தை வர்த்தகத்தை முற்றிலுமாக தவிர்த்து விடுவது நல்லது. நவம்பர் 2௦, 2020 முதல் ஏப்ரல் 5, 2021 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகள் செய்யலாம். ஏப்ரல் 5, 2021 முதல் எந்த ரிஸ்க்கையும் எடுப்பதை தவிர்த்து விடுவது நல்லது. அது உங்களுக்கு எதிர்பாராத பின்னடைவுகளை உண்டாக்கி விடக் கூடும்.
Prev Topic
Next Topic