குரு பெயர்ச்சி (2020 - 2021) பயணம் மற்றும் குடியேற்ற பலன்கள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி)

பயணம் மற்றும் குடியேற்ற பலன்கள்


குரு மற்றும் ராகு நல்ல நிலையில் சஞ்சரிப்பதால் தொலைதூர பயணம் உங்களுக்கு சிறப்பாக உள்ளது. பயண சீட்டு முன் பதிவு செய்வது, தங்கும் விடுதி மற்றும் வாடகை கார் போன்றவற்றில் நல்ல சலுகைகள் கிடைக்கும். வெளிநாட்டில் நல்ல தங்கும் வசதிகளைப் பெறுவீர்கள். புது கார் /வாகனம் வாங்கும் விடயங்களில் வெற்றிப் பெறுவீர்கள். டிசம்பர் 2020 முதல் மார்ச் 2021 வரையிலான காலகட்டத்தில் வெளிநாட்டிற்கு பயணம் செய்வது அல்லது இடமாற்றம் செய்வது போன்ற விடயங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் வகையில் இருக்கும்.
நிலுவையில் இருக்கும் குடியேற்றம் மற்றும் விசா குறித்த விடயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விசா குறித்த விடயங்களால் நீங்கள் உங்கள் தாய்நாட்டில் இருந்தால், பெப்ரவரி அல்லது மார்ச் 2021 வாக்கில் அதில் இருந்து வெளி வந்துவிடுவீர்கள். ஆஸ்திரேலியா அல்லது கனடா போன்ற நாடுகளில் நிரந்தர குடியுரிமைப் பெற விண்ணப்பிக்க இது நல்ல நேரம். குடியேற்ற பிரச்சனைகளில் இருந்து வெளிவருவதால் நீங்கள் மன நிம்மதியைப் பெறுவீர்கள்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic