குரு பெயர்ச்சி (2020 - 2021) வேலை / உத்தியோகம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி)

வேலை / உத்தியோகம்


செப்டம்பர் 24, 2020 முதல் நீங்கள் மிகக் கடுமையான நேரத்தை சந்தித்திருந்திருப்பீர்கள். அலுவலகத்தில் நடக்கும் கடுமையான அரசியலால் நீங்கள் பாதித்திருந்திருப்பீர்கள். கடுமையான வாக்குவாதங்களும், துரோகங்களும் உங்கள் தூக்கத்தை முற்றிலுமாக பாதித்திருந்திருக்கும். குரு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டிற்கு நவம்பர் 2௦, 2020 அன்று பெயர்ந்த பிறகு நீங்கள் நல்ல அதிர்ஷ்டத்தை காண்பீர்கள். நீங்கள் உங்கள் உத்தியோகத்தை இழந்திருந்தால், மார்ச் 31, 2021க்குள் உங்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைத்துவிடும்.
உங்கள் வேலை பளு மற்றும் பதற்றம் பெரும் அளவு குறையும். நல்ல முன்னேற்றம் தரக்கூடிய ப்ரோஜெக்ட்டில் வேலை செய்ய உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். உங்கள் முதலாளி மற்றும் உடன் வேலை பார்ப்பவர்கள் உங்களுக்கு நல்ல உறுதுணையாக இருப்பார்கள். நீண்ட காலமாக நீங்கள் காத்திருந்த பதவி உயர்வு தற்போது இந்த குரு பெயர்ச்சி காலத்தில் உங்களுக்கு கிடைக்கும். ராகு சிறப்பான நிலையில் சஞ்சரிப்பதால். உங்களுக்கு சம்பள உயர்வும், போனசும் கிடைக்கும்.


வெளிநாட்டிற்கு குடி பெயர் இது நல்ல நேரம். உங்கள் விசா மற்றும் குடியேற்ற பலன்கள் ஒப்புதல் பெரும். நீங்கள் விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் பெற இது நல்ல நேரம். இந்த காலகட்டத்தை பயன்படுத்திக் கொண்டு நீங்கள் உங்கள் உத்தியோகத்தில் நல்ல நிலையில் செட்டிலாக முயற்சி செய்யலாம். ஏப்ரல் 5, 2021 முதல் குரு உங்கள் ராசியின் 8ஆம் வீடான அஷ்டம ஸ்தானத்திற்கு பெயருவதால் நீங்கள் கடுமையான சோதனை காலத்தில் இருப்பீர்கள் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.



Prev Topic

Next Topic