![]() | குரு பெயர்ச்சி (2020 - 2021) நிதி / பணம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | நிதி / பணம் |
நிதி / பணம்
சனி பகவான், ராகு மற்றும் குரு உங்களுக்கு நிதி பிரச்சனைகளை முன்பே உருவாக்கி இருந்திருப்பார்கள். தற்போது குரு உங்கள் ஜென்ம ராசிக்கு பெயருவதால், உங்கள் நிலை தற்போது இருப்பதை விட மிகவும் மோசமாகக் கூடும். உங்கள் பண வரத்து, உத்தியோக இழப்பு, அதிக செலவுகள், எதிர்பார்க்காத செலவுகள் மற்றும் கடனுக்கு அதிக வட்டி விகிதம் போன்ற காரணங்களால் பாதிக்கக் கூடும்/ உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர்கள் அல்லது உறவினர்களால் நீங்கள் பண விடயங்களில் ஏமாற்றப்படலாம். நவம்பர் 2௦, 202௦ முதல் ஏப்ரல் 5, 2021 வரையிலான காலகட்டத்தில் உங்கள் உறவினர்கள் / நண்பர்களுக்கு வங்கி கடன் வாங்க சுருட்டி கொடுப்பது நல்ல யோசனையாக இருக்காது.
உங்கள் கடன் விண்ணைத் தொடும் அளவு உயர்வதால் பீதி அடையும் நிலையில் இருப்பீர்கள். உங்கள் வங்கிக் கடனை நிதி மறுபரிசீலனை செய்யவோ அல்லது வங்கிக் கடனுக்கு விண்ணப்பித்தாலோ அது எந்த காரணமும் இன்றி நிராகரிக்கப்படலாம். நீங்கள் வீடு வாங்கினால் அதில் குடி பெயரும் நாள் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும். இது குறிப்பாக கட்டுமான நிறுவனத்தால் ஏற்படும் பிரச்சனையாக இருக்கும். உங்களால் நல்ல விலைக்கு உங்கள் சொத்துக்களை விற்க முடியாமல் போகலாம். உங்கள் அதிர்ஷ்டத்தை அதிர்ஷ்ட சீட்டு அல்லது சூதாட்டம் போன்றவற்றில் முயற்சி செய்து பார்க்க இது ஏற்ற நேரம் இல்லை.
தங்கம் அல்லது விலை உயர்ந்த பொருட்களை நீங்கள் திருட்டு போன்ற காரணங்களால் இழக்க நேரிடலாம். உங்கள் சொத்துக்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை பாதுகாத்துக் கொள்ள போதிய காப்பீட்டை எடுத்துக் கொள்வது நல்லது. முடிந்த வரை யாருக்கும் பணம் கடன் கொடுப்பது அல்லது யாரிடமும் இருந்து பணம் கடன் வாங்குவது போன்றவற்றை தவிர்த்து விடுவது நல்லது. ஏப்ரல் 5, 2021க்கு பிறகு குரு உங்கள் ராசியின் 2ஆம் வீடான கும்ப ராசிக்கு பெயர்ந்த பின்னரே உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
Prev Topic
Next Topic