![]() | குரு பெயர்ச்சி (2020 - 2021) காதல் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | காதல் |
காதல்
தற்போது நீங்கள் யாரையாவது விரும்புகின்றீர்கள் என்றால், அவருடன் உங்களுக்கு கடுமையான நேரம் நிலவும். உங்கள் காதல் வாழ்க்கையில் காதல் குறைந்து அதிக வலி மிகுந்த சூழல்கள் ஏற்படும். உங்கள் இருவருக்கும் இடையே புதிதாக நபர் ஒருவர் வருவதால், அவர் செய்யும் சதியால் மேலும் விடயங்கள் மோசமாகக் கூடும். நீங்கள் விரும்புபவரை விட்டு பிரிந்து விடலாம் என்று நினைப்பீர்கள். காதல் திருமணத்திற்கு உங்கள் பெற்றோர்களின் சம்மதம் பெறுவது உங்களுக்கு கடினமாக இருக்கும்.
தங்கள் சொந்த வசதிகளுக்காக பிறர் உங்களது இந்த பிரச்சனைக்குரிய சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள். உங்கள் காதல் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகள் உங்களை பலவீனமாக்கலாம். மேலும் நீங்கள் ஒரு தவறான நபரை நோக்கி ஈர்க்கப்படலாம். உங்கள் காதலை தெரிவிக்க இது ஏற்ற நேரம் இல்லை. உங்கள் காதலை நீங்கள் தெரிவிக்க நினைபப்தால் அது உங்களுக்கு அவப்பெயரையும், பிரச்சனைகளையுமே உண்டாக்கக் கூடும்.
திருமணம் ஆனவர்கள் அன்யுனியம் குறைந்து காணப்படுவார்கள். இதனால் குறிப்பாக புதிதாக திருமணம் ஆன தம்பதியினர்களுக்கிடையே அதிக பிரச்சனைகள் ஏற்படும். குழந்தை பேருக்கு திட்டமிட இது ஏற்ற நேரம் இல்லை. IVF மற்றும் IUI போன்ற மருத்துவ சிகிச்சைகள் உங்களுக்கு எதிர்பார்த்த பலனைத் தராமல் போகலாம். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், ஏப்ரல் 5, 2021 வரை அது குறித்த முயற்சிகள் எடுக்காமல் இருப்பதே நல்லது.
Prev Topic
Next Topic