![]() | குரு பெயர்ச்சி (2020 - 2021) வேலை / உத்தியோகம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | வேலை / உத்தியோகம் |
வேலை / உத்தியோகம்
ஜனவரி 202௦ முதல் ஜென்ம சனியால் நீங்கள் ஓரளவு பாதிப்புகளை சந்தித்திருந்திருப்பீர்கள். கடந்த சமீப காலத்தில் அலுவலகத்தில் அரசியல்கள் ஏற்பட்டிருந்திருக்கும். இருப்பினும், அதனை நீங்கள் சமாளித்து இருந்திருப்பீர்கள். தற்போது குரு உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்து நவம்பர் 2௦, 202௦ முதல் சுனாமி போன்ற தாக்கத்தை உண்டாக்குவார்கள்.
உங்கள் மேலாளரால் நீங்கள் அதிகம் பாதிக்கப்படுவீர்கள். உங்கள் எச் ஆரிடம் இருந்து உங்களுக்கு செயல் திறன் முன்னேற்றம் குறித்த நோட்டீஸ் வரலாம். மேலும் அலுவலகத்தில் நடக்கும் அரசியல் அல்லது உயர் பதவியில் இருப்பவர்களால் ஏற்படும் உங்களுக்கு எதிரான சதிகள் நடப்பதால் உங்கள் உத்தியோகத்தை நீங்கள் இழக்கும் சூழலில் இருப்பீர்கள். ஏப்ரல் 5, 2021 வரை உங்கள் உத்தியோகத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அதற்கு உங்கள் பிறந்த சாதக பலன் இருக்க வேண்டும். இந்த குரு பெயர்ச்சி காலத்தில் நீங்கள் உங்கள் விசா அந்தஸ்த்தையும் இலக்கக் கூடும். உங்கள் அலுவலகத்தில் உங்களுக்கு ஏற்படும் அவமானங்களால் நீங்கள் உங்கள் உத்தியோகத்தை விட்டுவிடலாம் என்றும் கூட நினைப்பீர்கள்.
அலுவலகத்தில் நீங்கள் உங்களுடன் வேலை பார்க்கும் பெண்களிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் பெண்ணாக இருந்தால், உங்கள் உயர் அதிகாரி மற்றும் மேலாளரிடம் இருந்து பிரச்சனைகள் ஏற்படலாம். அலுவலகத்தில் யாருடனும் மனதளவில் மிகவும் நெருக்கமாக இருப்பதை தவிர்த்து விடுவது நல்லது. ஏனென்றால், அடுத்த 4 ½ மாதங்களுக்கு இதனால் உங்கள் உத்தியோகமே மிகவும் மோசமாக பாதித்து விடலாம். குரு விரைவாக 3௦ கோணத்தை ஒரே முறையில் கடப்பதால், நவம்பர் 21, 202௦ முதல் ஏப்ரல் 5, 2021 வரை உங்களுக்கு எந்த நிவாரணமும் இருக்காது.
Prev Topic
Next Topic