![]() | குரு பெயர்ச்சி (2020 - 2021) நிதி / பணம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | நிதி / பணம் |
நிதி / பணம்
குரு மற்றும் சனி பகவான் இணைந்து உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிலும், ராகு உங்கள் ராசியின் 12ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்கள் நிதி நிலையை பாதிப்பார்கள். உங்கள் பண வரத்து, உத்தியோகத்தை இழப்பதால், எதிர்பாராத செலவுகள் அல்லது வாங்கிய கடனுக்கு அதிக வட்டி செலுத்துவது போன்ற காரணங்களால் பாதிக்கக் கூடும். உங்கள் நண்பர்கள், உறவினர்கள் அல்லது குடும்பத்தினர்கள் நவம்பர் 2020 முதல் ஏப்ரல் 2021 வரையிலான காலகட்டத்தில் உங்களை பண விடயங்களில் ஏமாற்றக் கூடும். யாருக்கும் முடிந்த வரை பணம் கடன் கொடுப்பதையோ அல்லது யாரிடமும் இருந்து பணம் கடன் வாங்குவதையோ தவிர்த்து விடுவது நல்லது. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வங்கியில் பணம் கடன் வாங்க சுருட்டி கொடுப்பதை தவிர்த்து விடுவது நல்லது.
உங்கள் செலவுகளை சமாளிக்க நீங்கள் உங்கள் கிரெடிட் கார்டு தொகையை அதிகரிக்க வேண்டும். உங்கள் வங்கிக் கடன் மற்றும் நிதி மறுபரிசீலனை ஒப்புதல் பெறாமல் போகலாம். நீங்கள் வீடு வாங்க முயற்சித்தால், அதில் குடி பெயர முடியாமல் கட்டுமான நிபுணரால் மார்ச் 2021 வரை நாட்கள் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும். உங்களால் நல்ல விலைக்கு உங்கள் சொத்துக்களை விற்க முடியாமல் போகலாம். அதிர்ஷ்ட சீட்டு அல்லது சூதாட்டம் போன்றவற்றில் உங்கள் அதிர்ஷ்டத்தை முயற்சிக்க இது ஏற்ற நேரம் இல்லை.
தங்க நகைகள் வாங்க இது ஏற்ற நேரம் இல்லை. நீங்கள் பயணம் செய்ய முயற்சித்தால் பெப்ரவரி முதல் மார்ச் 2021 வரை திருட்டு போக வாய்ப்பு உள்ளதால் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். போதிய மருத்துவ காப்பீடு எடுத்துக் கொண்டு உங்கள் சொத்துக்களையும், விலை உயர்ந்த பொருட்களையும் பாதுகாத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். மொத்தத்தில் நீங்கள் உங்கள் பிறந்த சாதக பலனை பார்த்தே நிதி குறித்த எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்க முயற்சிக்க வேண்டும்.
Prev Topic
Next Topic