குரு பெயர்ச்சி (2020 - 2021) (முதல் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி)

நவம்பர் 20, 2020 முதல் பெப்ரவரி 21, 2021 வரை மோசமான காலகட்டம் (40 / 100)


குரு உங்கள் ராசியின் 8ஆம் வீடான அஷ்டம ஸ்தானத்திற்கு பெயருகிறார். சனி பகவானும் இணைந்த உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரிகின்றனர். அஷ்டம குரு மற்றும் அஷ்டம சனியால் ஒரே நேரத்தில் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள். இது ஒரு நபருக்கு வாழ்க்கையில் நடக்கும் மிகக் கடுமையான சோதனை காலமாக இருக்கும். கேது உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிலும், செவ்வாய் 11ஆம் வீட்டிலும் டிசம்பர் 202௦ வாக்கில் சஞ்சரித்து உங்கள் நண்பர்கள் மூலம் உங்களுக்கு சில உதவிகளை செய்வார்கள்.
உங்கள் வாழ்க்கையின் பல விடயங்களில் நீங்கள் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். உங்கள் உடல் நலம் மோசமாக பாதிக்கக் கூடும். உங்கள் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். உங்கள் மனைவி/கணவன், குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் உங்களுக்கு கருத்துவேறுபாடுகள் ஏற்படக் கூடும். குடும்பத்தில் அதிகரிக்கும் அரசியலால் உங்கள் மன நிம்மதி பாதிக்கக் கூடும். குழந்தை பேருக்கும், சுப காரியங்கள் நடத்தவும் திட்டமிட இது ஏற்ற நேரம் இல்லை.


உங்கள் உத்தியோக வாழ்க்கை அலுவலகத்தில் ஏற்படும் மாற்றங்களால் மோசமாக பாதிக்கப்படலாம். உங்கள் முதலாளி உங்களை அதிகம் கண்காணிப்பார். அலுவலகத்தில் நடக்கும் சதி மற்றும் அரசியலால் நீங்கள் உங்கள் முக்கியத்துவத்தை இழக்க நேரிடலாம். நீங்கள் அவமானப்படுவதால் உங்கள் உத்தியோகத்தையும் ராஜினாமா செய்து விட நினைக்கலாம். அல்லது எந்த பலனும் இன்றி உங்களை உத்தியோகத்தில் இருந்து பணிநீக்கம் செய்து விடலாம். உங்கள் விசா அந்தஸ்த்தை இழந்து நீங்கள் உங்கள் தாய்நாடு திரும்ப நேரிடலாம். தொழிலதிபர்கள் அதிக சவால்களை சந்திப்பார்கள்.
உங்கள் நிதி நிலை குறித்த விடயங்களுக்கு இது சவால் நிறைந்த காலகட்டமாக இருக்கும். அதிகரிக்கும் நிதி தேவைகளால் உங்கள் சேமிப்பு கரையும். நீங்கள் கவனமாக இல்லையென்றால், பண விடயங்களில் நீங்கள் ஏமாற்றப்படலாம். எந்த விதமான பங்கு சந்தை முதலீடுகளையும் நீங்கள் தவிர்த்து விடுவது நல்லது. அப்படி நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால் உங்கள் பணத்தை முற்றிலுமாக இழந்து நீங்கள் நட்டமடையக் கூடும். உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு இந்த சோதனை காலத்தை கடக்க முயற்சி செய்யுங்கள்.




Prev Topic

Next Topic