![]() | குரு பெயர்ச்சி (2020 - 2021) வழக்கு பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | வழக்கு |
வழக்கு
குரு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் நவம்பர் 2௦, 2020 முதல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு சட்ட பிரச்சனைகள் ஏற்படக் கூடும். உங்கள் மீது தவறான குற்றச்சாட்டுகள் வைக்கப்படலாம். இதனால் நற்பெயரை நீங்கள் இழப்பதோடு, பணத்தையும் இழப்பீர்கள். நீதிமன்ற வழக்குகள் நடந்து கொண்டிருந்தாள், வழக்கை இழந்து, தீர்ப்பும் உங்களுக்கு எதிராக வரலாம். இதனால் உங்களுக்கு நிதி இழப்புகள் ஏற்படும். மேலும் உங்கள் செல்வாக்கும் பாதிக்கப்படும். கிரிமினல் வழக்குகளில் இருந்து வெளி வர முடியாமல் போகலாம். உங்கள் பிறந்த சாதகத்தை பார்த்தே நீங்கள் வேறு வழிகளை நாட முயற்சிக்க வேண்டும்.
மருத்துவ துறையில் இருப்பவர்கள் தங்கள் பழைய நோயாளிகளிடம் இருந்தும், மருத்துவமனை நிர்வாகத்தில் இருந்தும் எதிர்பாராத வழக்குகள் வருவதால் அதிர்ச்சி அடைவார்கள். உங்கள் மனைவி/கணவன், உடன் பிறந்தவர்கள் அல்லது உறவினர்களுடன் சட்ட பிரச்சனைகள் ஏற்படுவதால் இது உங்களுக்கு ஒரு மோசமான காலகட்டமாக இருக்கும். ஜீவனாம்சம், குழந்தை காவல் போன்ற வழக்குகளால் நீங்கள் பெரும் அளவு பாதிக்கப்படுவீர்கள். சுதர்சன மகா மந்திரம் அல்லது கந்த சஷ்டி கவசம் கேட்டு உங்கள் பிரச்சனைகளின் தாக்கத்தை குறைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்கள் சொத்துக்களை பாதுகாத்துக் கொள்ள அம்ப்ரல காப்பீடு எடுத்துக் கொள்வது நல்லது.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic