குரு பெயர்ச்சி (2020 - 2021) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி)

கண்ணோட்டம்


ஜனவரி 2020 முதல் உங்களுக்கு அஷ்டம சனி தொடங்கி உள்ளது. ஆனால் குரு கடந்த மாதங்களில் உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரித்ததால் அஷ்டம சனியின் தாக்கம் குறைவாகவே இருந்திருக்கும். ஆகஸ்ட் 2020 முதல் நல்ல பலன்களை பெற்றிருப்பீர்கள். ராகு உங்கள் ராசியின் 12ஆம் வீட்டிலும், கேது 6ஆம் வீட்டிலும் சஞ்சரித்து செப்டம்பர் 2020 முதல் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தந்திருப்பார்கள்.
தற்போது குரு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிற்கு பெயருவது உங்களுக்கு ஒரு சாதகமற்ற செய்தியாகும். இந்த குரு பெயர்ச்சி 4 ½ மாதங்களுக்கான குறுகிய கால பெயர்ச்சியாக இருக்கும். இதற்கான காரணம், குரு முன்பே 3 மாத காலத்திற்கு மார்ச் 3௦, 2020 முதல் ஜூன் 3௦, 2020 வரையிலான காலகட்டத்தில் தனுசு ராசி பெயர்சின் போது மகர ராசியில் சஞ்சரித்து விட்டார். மேலும் செப்டம்பர் 15, 2021 முதல் நவம்பர் 19, 2021 வரையிலான காலகட்டத்தில் மகர ராசியில் 2 மாத காலத்திற்கு கும்ப ராசி பெயர்ச்சியில் சஞ்சரிப்பார். அதனால் கும்ப ராசிக்கான குரு பெயர்ச்சி ஏப்ரல் 5, 2021 முதல் தொடங்குவதோடு, இது ஒரு இயல்பான பெயர்சியாகவே இருக்கும்.


குரு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரித்து அடுத்த 4 1/2 மாதங்களுக்கு நவம்பர் 20, 2020 முதல் கசல்பான அனுபவங்களை உங்களுக்கு தரக் கூடும். அஷ்டம சனியின் உண்மையான தாக்கத்தை இந்த காலகட்டத்தில் உணருவீர்கள். நீங்கள் எதை செய்தாலும் அதில் கவனமாக இருக்க வேண்டும். எதிர்பாராத பிரச்சனைகளும், நிதி பிரச்சனைகளும் உங்கள் வாழ்க்கையில் ஏற்படக் கூடும். சட்ட பிரச்சனைகளும் ஏற்படலாம். மேலும் இதனால் உங்கள் நற்பெயரும் பாதிக்கப்படலாம். உங்கள் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொண்டு இதே நிலையில் நீங்கள் ஏப்ரல் 2021 வரை இருந்து விட்டாலே அதுவே உங்களுக்கு ஒரு பெரிய சாதனையாக இருக்கும். உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு இந்த சோதனை காலத்தை கடக்க முயற்சி செய்யுங்கள்.


Prev Topic

Next Topic