![]() | குரு பெயர்ச்சி (2020 - 2021) திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள் |
திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள்
குரு மற்றும் சனி பகவான் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு கசப்பான அனுபவங்களை தரக் கூடும். இதனால் உங்களுக்கு அவப்பெயரும் ஏற்படக் கூடும். உங்கள் படம் இந்த காலகட்டத்தில் வெளிவர இருந்தால் அது தோல்வி அடையலாம். உங்கள் இரசிகர்கள் ஏமாற்றம் அடைவார்கள். உங்களுக்கு கடன் கொடுத்தவர்கள் மீண்டும் பணத்தை திரும்பித் தர கட்டாயப்படுத்துவார்கள். உங்களுடன் வேலை பார்ப்பவர்களுடன் அல்லது ஊடகங்களுடன் உங்களுக்கு கடுமையான வாக்குவாதங்கள் ஏற்படக் கூடும். வலைதள பதிவுகள் மற்றும் வதந்திகளால் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள்.
மறைமுக எதிரிகள் மற்றும் அரசியலால் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு எதிரான அரசியல், துரோகம் மற்றும் சதி போன்றவற்றால் உங்கள் மன நிம்மதி பாதிக்கப்படும். மேலும் தவறான நபரை நோக்கி நீங்கள் ஈர்க்கபப்ட்டு புதிய உறவை உண்டாக்கிக் கொள்ள முயற்சிப்பதால் உங்கள் நற்பெயர் பாதிக்கக் கூடும். ஒரு பெரிய அளவிலான அரசியலில் நீங்கள் சிக்கப் போகின்றீர்கள் என்று உங்களுக்குத் தெரியாமலேயே இருக்கும். ஏப்ரல் 2021 வரை உங்கள் செல்வாக்கை உங்களால் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்றால் அதுவே பெரிய சாதனையாக உங்கள் வாழ்க்கையில் இருக்கும்.
Prev Topic
Next Topic