![]() | குரு பெயர்ச்சி (2020 - 2021) (இரண்டாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | இரண்டாம் பாகம் |
பெப்ரவரி 21, 2020 முதல் ஏப்ரல் 05, 2021 வரை மிக மோசமான நேரம் (25 / 100)
எதிர்பாராவிதமாக செவ்வாய் மற்றும் ராகு உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் இணைந்து சஞ்சரிப்பதால் இந்த் பாகத்தில் விடயங்கள் மிகவும் மோசமாகக் கூடும். முக்கிய கிரகங்கள் உங்கள் ராசியின் 6 மற்றும் 8ஆம் வீட்டில் மற்றும் 12ஆம் வீட்டில் சஞ்சரிப்பது மிகவும் மோசமான சேர்க்கையாகும். உங்கள் மனக் கவலை மற்றும் பதற்றம் அதிகரிக்கும். உங்கள் குடும்பத்தில் ஏற்படும் அரசியலால் உங்கள் உறவுகள் பாதிக்கக் கூடும்.
உங்களுக்கு மன உளைச்சலும் ஏற்படலாம். உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் முன்நிலையில் நீங்கள் அவப்பெயரை இழந்து, அவமானப் படும் சூழலும் உண்டாகலாம். சுப காரியங்கள் நிகழ்த்துவதை தவிர்த்து விடுவது நல்லது. காதலர்கள் மற்றும் புதிதாக திருமணம் ஆனவர்கள் மிக மோசமான காலகட்டத்தை சந்திப்பார்கள். இந்த சோதனை காலத்தை கடக்க நீங்கள் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். ஏப்ரல் 2021 இரண்டாம் வாரம் முதல், விடயங்கள் விரைவாக உங்களுக்கு சாதகமாக மாறும்.
உங்கள் வேலை சுமை மற்றும் பதற்றம் அதிகரிக்கும். எந்த பலனும் இன்றி உங்கள் உத்தியோகத்தை நீங்கள் இழக்க நேரிடலாம். பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு போன்றவற்றை எதிர்பார்க்க இது ஏற்ற நேரம் இல்லை. தற்போது இருக்கும் நிறுவனத்திலேயே அதே நிலையில் இந்த சோதனை காலம் முழுவதும் இருந்து விடுவது நல்லது. மே 2021 முதல் உங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்கள் நிதி நிலை அதிகரிக்கும் செலவுகள் மற்றும் கடனால் பாதிக்கக் கூடும். பங்கு சந்தை முதலீடுகளால் உங்களுக்கு நிதி இழப்புகளும் ஏற்படலாம். எந்த விதமான முதலீடுகளில் இருந்தும், ரியல் எஸ்டேட் முதலீடுகள், பங்கு சந்தை முதலீடுகள் ஆகியவற்றில் இருந்து விலகி இருப்பது நல்லது.
Prev Topic
Next Topic