குரு பெயர்ச்சி (2020 - 2021) வர்த்தகம் மற்றும் முதலீடுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி)

வர்த்தகம் மற்றும் முதலீடுகள்


சனி பகவான் மற்றும் குரு இணைந்து உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் நவம்பர் 21, 2020 முதல் ஏப்ரல் 5, 2021 வரை சஞ்சரித்து உங்களுக்கு நிதி இழப்புகளை உண்டாக்கக் கூடும். வர்த்தகத்தில் நீங்கள் பணத்தை இழந்து கொண்டே இருப்பீர்கள். உங்கள் பணம் அனைத்தையும் நீங்கள் ஒரே இரவில் இழந்து விட நேரிடலாம். உங்களுக்கு அப்படி நிதி இழப்பு ஏற்பட்டால், அதில் இருந்து நீங்கள் மீண்டு வர 5 முதல் 1௦ ஆண்டுகள் கூட ஆகலாம். தற்போது முதலீடுகள் செய்ய நேரம் ஏற்றதாக இல்லை என்பதால் மே 2021 முதல் வாரம் வரை பங்கு சந்தையை விட்டு முற்றிலுமாக விலகி இருப்பது நல்லது.
உங்கள் மகா தசை சாதகமாக இருந்தாலும், அடுத்த 5 மாதங்கள் உங்களுக்கு சவால் நிறைந்த நேரமாகவே இருக்கும். நீங்கள் கட்டிடம் கட்டிக் கொண்டிருந்தாள் அலல்து ரியல் எஸ்டேட் ப்ரொஜெக்டில் இருந்தால், நீங்கள் துரோகம் அல்லது அரசு அறிக்கை அல்லது பணத்தின் மதிப்பு மாறுவது போன்ற காரணங்களால் பெரும் அளவு பணத்தை இழக்க நேரிடலாம். சொத்துகளில் முதலீடு செய்வதை தவிர்த்து விடுவது நல்லது.


வீடு வாங்க முன் தொகை கொடுக்க உள்ளீர்கள் என்றால், அந்த கட்டுமான நிபுணர் உங்கள் பணத்தை எடுத்துக் கொண்டு மார்ச் 2021 வாக்கி ஓடி விடக் கூடும். உங்கள் வீட்டில் குடி இருப்பவர்களால் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படக் கூடும். உங்களுக்கு சொந்தமாக நிலம் இருந்தால், மூன்றாவது நபரால் அதில் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படக் கூடும். உங்கள் பணத்தை பாதுகாப்பாக சேமிப்பு கணக்கு போன்றவற்றில் போட்டு வைத்துக் கொள்வது நல்லது.


Prev Topic

Next Topic