![]() | குரு பெயர்ச்சி (2020 - 2021) வேலை / உத்தியோகம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | வேலை / உத்தியோகம் |
வேலை / உத்தியோகம்
ஜனவரி 23, 2020 முதல் உங்களுக்கு அஷ்டம சனி நடந்தாலும், குரு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரித்ததன் பலத்தால் நல்ல பலன்களைப் பெற்றிருப்பீர்கள். தற்போது குரு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் நவம்பர் 2௦, 2020 முதல் சஞ்சரிப்பார். குரு விரைவாக 3௦ கோணத்தை முழுமையாக 4 ½ மாத காலத்திற்குள் கடந்து விடுவதால், பாதிப்புகளை நீங்கள் உடனடியாக இந்த பெயர்ச்சி தொடங்கியதும் உணரலாம்.
நீங்கள் உங்கள் உத்தியோகத்தை டிசம்பர் 2020 அல்லது 2021-ன் தொடக்கத்தில் ராஜினாமா, ஆட்குறைப்பு, செயல்திறன் குறைவு அல்லது ப்ராஜெக்ட் ரத்தாவது போன்ற காரணங்களால் இழந்தால் அதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காமல் போவதால் நீங்கள் ஏமாற்றம் அடையக் கூடும். உங்கள் எதிர்பார்ப்புகளை நீங்கள் முற்றிலுமாக குறைத்துக் கொள்வது நல்லது.
உங்கள் மேலார் உங்களை துன்புறுத்தக் கூடும் என்பதால், உங்கள் உத்தியோகத்தை தக்க வைத்துக் கொள்ள மிகவும் பொறுமையாக இருக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் மேலாளருடன் நீங்கள் எந்த விதமான வாக்குவாதங்கள் செய்தாலும், அது உங்களுக்கு உடனடியாக பாதிப்பை உண்டாக்கி விடும். உங்கள் உத்தியோக வாழ்க்கை பாதிக்கக் கூடும். எந்த முன்னேற்றமும், வளர்ச்சியும் இல்லாத ப்ரோஜெக்ட்டில் நீங்கள் வேலை பார்க்க வேண்டிய நிலையில் இருப்பீர்கள். அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக நடக்கும் அரசியல் மற்றும் சதிகளால் நீங்கள் பாதிக்கப்படலாம். அனேக நேரங்களில் நீங்கள் பாதிக்கப்படப் போகின்றீர்கள் என்று உங்களுக்குத் தெரியாமலேயே இருக்கும்.
நீங்கள் பெண்களிடமும், இளம் வயதினர்களுடனும் அலுவலகத்திலும், சமூக வட்டாரத்திலும் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். நீங்கள் பெண்ணாக இருந்தால், உங்கள் உயர் அதிகாரிகள் மற்றும் மேலாளர்கள் போன்றவர்களால் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படக் கூடும். நீங்கள் அலுவலகத்தில் யாருடனாவது அதிக நெருக்கத்தோடு பழகினால், அது உங்கள் வாழ்க்கையை மிகவும் மோசமாக்கி விடலாம். இதனால் உங்கள் அலுவலகத்தில் நீங்கள் உங்கள் நற்பெயரையும், உத்தியோகத்தையும் இழக்க நேரிடலாம். நீங்கள் ஒப்பந்தம் ரீதியாக வேலை செய்துக் கொண்டிருகின்றீர்கள் என்றால், உங்கள் கன்சல்டன்சி நிறுவனம் உங்களது சம்பளத்தின் பெரும் தொகையை எடுத்துக் கொள்வார்கள்.
Prev Topic
Next Topic