![]() | குரு பெயர்ச்சி (2020 - 2021) தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் |
தொழில் மற்றும் இரண்டாம் வருமானம்
தொழிலதிபர்கள் நவம்பர் 2020 இரண்டாம் வாரம் வரை மகிழ்ச்சியான காலகட்டத்தை பெற்றிருப்பார்கள். சனி பகவான் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிலும், ராகு 11ஆம் வீட்டிலும் மற்றும் குரு 5ஆம் வீட்டிலும் சஞ்சரித்து செப்டம்பர் 25, 2020 வரை உங்களுக்கு பண மழையை பொலிந்திருபபர்கள். செப்டம்பர் 25, 2020 அன்று ஏற்பட்ட ராகு மற்றும் கேது உங்களுக்கு சிறப்பாக இல்லை. தற்போது குருவும் உங்களுக்கு எதிராக உள்ளார். ஆனால் சனி பகவான் நல்ல நிலையில் சஞ்சரிகின்றார்.
உங்கள் பங்குதாரருடன் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படலாம். நவம்பர் 2௦, 2020 முதல்ஏப்ரல் 5, 2021 வரையிலான காலகட்டத்தில் உங்கள் மீது தவறான குற்றச்சாட்டும், உங்களுக்கு சட்ட பிரச்சனைகளும் ஏற்பட்டால், அதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. உங்கள் போட்டியாளர்கள் உங்கள் வளர்ச்சியை பாதிக்கும் வகையில் உங்களக்கு எதிரான சதிகளை செய்வார்கள். குரு உங்கள் ராசியின் ரூன ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிபதால் உங்கள் மறைமுக எதிரிகள் பலம் பெறுவார்கள். உங்களுக்கு நிதி பிரச்சனைகள் ஏற்படக் கூடும்.
முடிந்த வரை யாருக்கும் பணம் கடன் கொடுப்பதையோ அல்லது யாரிடமும் இருந்து பணம் கடன் வாங்குவதையோ தவிர்த்து விடுவது நல்லது. நீங்கள் எதிர்பார்த்த நேரத்தில் உங்களுக்கு நிதி கிடைக்காமல் போகலாம். அரசியின் திட்டங்களில் மாற்றங்கள், பண மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது வேறு பல காரணங்களால் உங்கள் தொழிலின் வளர்ச்சியில் சில பிரச்சனைகள் ஏற்படலாம்/ உங்களது இந்த பலவீனமான நிலையை உங்கள் போட்டியாளர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துக் கொள்வார்கள். உங்கள் தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியை தற்போது தவிர்த்து விடுவது நல்லது. மேலும் நிர்வாக செலவுகளை குறைக்க திட்டமிடுவது நல்லது. சுய தொழில் புரிவோர்கள், ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள், இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள் மற்றும் கமிசன் ஏஜெண்டுகள் குறைந்த லாபத்திற்காக கடினமாக உழைக்க வேண்டிய நிலையில் இருப்பார்கள்.
Prev Topic
Next Topic