குரு பெயர்ச்சி (2020 - 2021) (இரண்டாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Simma Rasi (சிம்ம ராசி)

பெப்ரவரி 21, 2020 முதல் ஏப்ரல் 05, 2021 வரை கடுமையான பின்னடைவுகள் (35 / 100)


செவ்வாய் ராகுவுடன் இணைந்து உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சர்கின்றார். குரு, செவ்வாய் மற்றும் ராகுவை பார்வை இடுவதால் உங்கள் பிரச்சனைகளின் தாக்கம் அதிகரிக்கும். நீங்கள் உங்கள் உடல் நலம் குறித்த விடயங்களில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் குடும்பத்தினர்களுடன் இருக்கும் உறவு பாதிக்கக் கூடும். சுப காரியங்கள் நடத்துவதை இந்த பாக காலகட்டத்தில் தவிர்த்து விடுவது நல்லது. சனி பகவான் நல்ல நிலையில் சஞ்சரிப்பதால் விடயங்கள் அனைத்தும் உங்கள் கட்டுபாடிற்குள்ளேயே இருக்கும். இது உங்களுக்கு ஒரு நல்ல செய்தியாகும்.
அலுவலகத்தில் உங்களால் எந்த வளர்ச்சியையும் எதிர்ப்பார்க்க முடியாது. உங்கள் பதவி உயர்வு குறித்த விடயங்கள் சில மாதங்களுக்கு தாமதமாகலாம். அதிக வேலை பளு இருந்தாலும், சனி பகவானின் பலத்தோடு உங்களால் அதனை சரியான நேரத்தில் முடித்து சமாளித்து விட முடியும். தொழிலதிபர்கள் நிர்வாக செலவுகளையும், விளம்பர செலவுகளையும் குறைத்துக் கொண்டு செயல்படுவது நல்லது.


உங்கள் நிதி நிலை மோசமாக பாதிக்கக் கூடும். முதலீடுகள் குறித்த முடிவுகளை தவிர்த்து விடுவது நல்லது. புது வீடு வாங்குவது மற்றும் புது வீட்டிற்கு குடி பெயருவது போன்ற விடயங்களை தவிர்த்து விடுவது நல்லது. முடிந்த வரை பயணம் செய்வதை தவிர்த்து விடுவது நல்லது. பங்கு சந்தை வர்த்தகம் உங்களுக்கு பண இழப்பை உண்டாக்கும். ஏப்ரல் 5, 2021 வரை நீங்கள் காத்திருந்தால், அதன் பின்னர் குரு உங்கள் ராசியின் 7ஆம் வீடான களத்திற ஸ்தானத்திற்கு பெயர்ந்த பிறகு உங்களுக்கு சிறப்பான மாற்றங்கள் ஏற்படும்.


Prev Topic

Next Topic