குரு பெயர்ச்சி (2020 - 2021) வேலை / உத்தியோகம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Simma Rasi (சிம்ம ராசி)

வேலை / உத்தியோகம்


குரு உங்கள் ராசியின் 5ஆம் வீட்டிலும், சனி பகவான் 6ஆம் வீட்டிலும், ராகு 11ஆம் வீட்டிலும் சஞ்சரித்து ஜனவரி 2020 முதல் செப்டம்பர் 2020 வரை உங்களுக்கு ராஜ யோகத்தை உண்டாக்கி இருந்திருப்பார்கள். உங்கள் உத்தியோகத்தில் ஒரு சுமூகமான பயணத்தை நீங்கள் பெற்றிருப்பீர்கள். சனி பகவான் வரும் நாட்களிலும் உங்களுக்கு நல்ல வளர்ச்சிப் பெற உதவியாக இருப்பார். ஆனால் குரு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிற்கு நவம்பர் 2௦, 2020 அன்று பெயருவதால் அலுவலகத்தில் சில அரசியல் உண்டாகும். உங்களது விரைவான வளர்ச்சி மற்றும் வெற்றியைக் கண்டு பிறர் பொறாமைப் படுவார்கள். உங்கள் மறைமுக எதிரிகளிடம் இருந்து உங்களுக்கு பிரச்சனைகள் உண்டாகும்.
நவம்பர் 2௦, 2020 முதல் ஏப்ரல் 5, 2021 வரையிலான காலகட்டத்தில் அலுவலகத்தில் உங்களுக்கு கடுமையான வாக்குவாதங்கள் ஏற்படக் கூடும். உங்கள் வேலை சுமை அதிகரிபதால் உங்கள் உத்தியோக வால்ககி பாதிக்கப்படலாம். உங்கள் முதலாளி உங்களது கடின உழைப்பு மற்றும் செயல் திறனைக் கண்டு மகிழ்ச்சி அடைய மாட்டார். உங்கள் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு தாமதமாகலாம். உங்களுக்கு பிரச்சனையாக இருக்கும் உடன் வேலை பார்ப்பவர்கள் அல்லது மேலாளரைப் பற்றி எச் ஆரிடம் புகார் கூறுவதை தவிர்த்து விடுவது நல்லது. அப்படி செய்தால், அது உங்களுக்கே பிரச்சனையாகி விடலாம். உங்கள் அலுவலகத்தில் நடக்கும் அரசியலை உங்களால் சமாளிக்க முடியாமல் போகலாம்.


உங்கள் நிறுவனத்தில் இருந்து உங்களுக்கு கிடைக்கவிருக்கும் குடியேற்ற பலன்கள், இடமாற்றம் அல்லது இன்சூரன்ஸ் பலன்கள் தாமதமாகலாம். நீங்கள் ஒப்பந்தம் ரீதியாக வேலை பார்கின்றீர்கள் என்றால், அது நிரந்தரமாக அல்லது முழு நேரமாக தாமதமாகலாம். இந்த குரு பெயர்ச்சி 4 1/2 மாதங்கள் மட்டுமே ஆன குறுகிய கால பெயர்ச்சி என்றாலும், இந்த சோதனை காலத்தில் நீங்கள் எந்த ஒரு முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்றால், உங்கள் பிறந்த சாதகத்தை சோதிடரிடம் காட்டி ஆலோசனைப் பெற்று பின்னர் செயல்படுவது நல்லது. ஏப்ரல் 5, 2021 முதல் நீங்கள் சிறப்பாக செயல்படத் தொடங்குவீர்கள்.


Prev Topic

Next Topic