![]() | குரு பெயர்ச்சி (2020 - 2021) தொழில் மற்றும் இரண்டாம் பாகம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | தொழில் மற்றும் இரண்டாம் பாகம் |
தொழில் மற்றும் இரண்டாம் பாகம்
இந்த 2020ஆம் ஆண்டு தொழிலதிபர்களுக்கு அதிக இழப்புகளை உண்டாக்கி இருந்திருக்கும். ராகு உங்கள் ராசியின் 9ஆம் வீட்ட்லும், சனி பகவான் 4ஆம் வீட்டிலும், குரு 3ஆம் வீட்டிலும் சஞ்சரித்து கடந்த மாதங்களில் உங்களுக்கு மிகவும் மோசமான பலனை தந்திருப்பார்கள். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால் தொழிலில் ஏற்பட்ட நட்டம் அல்ல வங்கிக் கணக்கு திவாலான காரணத்தால் உங்கள் சொத்துக்களை நீங்கள் விற்க முயற்சி செய்திருப்பீர்கள்.
குரு உங்கள் ராசியின் 4ஆம் வீட்டிற்கு பெயர்ந்து உங்களுக்கு சில நிவாரணத்தை தருவார். ஆனால் பெரிதாக எந்த அதிர்ஷ்டத்தையும் எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால், சனி பகவான் ஐந்தாம் பார்வையாய் செவ்வாயை பார்வை இடுவதால் அதிக தடைகள் ஏற்படக் கூடும். குரு ஓரளவிற்கு உங்கள் பிரச்சனைகளை சரி செய்ய உதவுவார்., எனினும், நேர்மறை சக்திகளை விட எதிர்மறை சக்திகளே அதிகமாக உள்ளது.
வங்கிக் கடன் மூலம் உங்களுக்கு நிதி உதவி கிடைக்கும். ஆனால் வட்டி விகிதம் மிகவும் அதிகமாக இருக்கும். நீங்கள் நீண்ட கால அடிப்படையில் தொழிலை நடத்த முயற்சி செய்தால், அதற்கு உங்கள் பிறந்த சாதக பலன் சிறப்பாக இருக்க வேண்டும். உங்களுக்கு ஏதாவது வழக்கு நடந்து கொண்டிருந்தாள், அதன் தீர்ப்பு உங்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்கக் கூடும். கிரிமினல் வழக்குகளில் இருந்து உங்களால் வெளி வர முடியாமல் போகலாம். உங்கள் பங்குதாரருடன் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படலாம். பண விடயங்கலில் நீங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்படலாம்.
Prev Topic
Next Topic