![]() | குரு பெயர்ச்சி (2020 - 2021) (முதல் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | முதல் பாகம் |
நவம்பர் 20, 2020 முதல் பெப்ரவரி 21, 2021 வரை குறிப்பிடத்தக்க நிவாரணம் (60 / 100)
சனி பகவான், ராகு மற்றும் கேதுவிடம் இருந்து எந்த நல்ல பலனையும் நீங்கள் எதிர்பார்க்க முடியாது. ஆனால் குரு உங்கள் ராசியின் 4ஆம் வீட்டிற்கு பெயர்ந்து உங்கள் பிரச்சனைகளின் தாக்கத்தை சற்று குறைப்பார். உங்கள் உடல் நல பிரச்சனைகள் குறையும். உங்களுக்கு சரியான சிகிச்சை கிடைக்கும். உங்கள் குடும்பத்தினர்கள் நல்ல உறுதுணையாக இருப்பார்கள். உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்பார்கள். உங்கள் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் நிச்சயிக்க இது ஏற்ற நேரம். ஆனால் சுப காரியங்கள் நடத்தும் போது அதிக அழுத்தம் நிறைந்த சூழல் இருக்கும்.
உங்கள் அலுவலகத்தில் நல்ல நிவாரணம் கிடைக்கும். உங்களுடன் உயர் பதவியில் வேலை பார்ப்பவர்கள் உங்களுக்கு உதவி செய்து உங்களை குழப்பமான நிலையில் இருந்து வெளி வரச் செய்வார்கள். உங்கள் வேலை பளு, மற்றும் பதற்றம் குறையும். உங்கள் குடும்பத்தினர்களுடன் நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். ஆனாலும், உங்கள் உத்தியோகத்தில் வளர்ச்சியையோ அல்லது புது வேலை வாய்ப்பையோ எதிர் பார்க்க இது நேரம் இல்லை. தொழிலதிபர்களுக்கு சில நிவாரணம் கிடைக்கும். ஆனால் உங்களுக்கு புது ப்ராஜெக்ட் கிடைக்க மேலும் சற்று காலம் ஆகலாம்.
பயணம் உங்களுக்கு கலவையான பலன்களைத் தரும். உங்கள் நிதி நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்படும். உங்கள் வங்கிக் கடன் ஒப்புதல் பெரும். உங்கள் செலவுகள் குறையும். அதனால் உங்கள் கடனும் குறையும். ஆனாலும், பங்கு சந்தை வர்த்தகத்தை விட்டு முற்றிலுமாக விலகி இருப்பது நல்லது. பண வரத்தை அதிகரித்து உங்கள் கடனை அடைக்க நீங்கள் உங்கள் சொத்துக்களை விற்க முயற்சிப்பீர்கள். ஆனால் இந்த பாகத்தில் புதிதாக சொத்துக்கள் வாங்குவதை தவிர்த்து விடுவது நல்லது.
Prev Topic
Next Topic