![]() | குரு பெயர்ச்சி (2020 - 2021) காதல் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | காதல் |
காதல்
சனி பகவான் உங்கள் ராசியின் 4ஆம் வீட்ட்லும், குரு 3ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்கள் காதல் வாழ்க்கையில் சண்டைகளை உண்டாக்கக் கூடும். செப்டம்பர் 29, 2020 வாக்கில் உங்கள் இருவீட்டார்களுக்கும் இடையில் சண்டைகள் ஏற்பட்டிருந்திருக்கக் கூடும். குரு உங்கள் ராசியின் 4ஆம் வீட்டிற்கு பெயருவது ஒரு நல்ல செய்தியாகும். இதனால் உங்கள் பிரச்சனைகளின் தாக்கம் குறையும். ஆனால், எதிர்பாராவிதமாக, சனி பகவான் செவ்வாயுடன் ஐந்தாம் பார்வையை இந்த குரு பெயர்ச்சி காலத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் பிரச்சனைகளுக்கு நீங்கள் நல்ல தீர்வைப் பெற முடியாமல் போகலாம். அழுத்தம் நிறைந்த சூழல் நிலவும்.
உங்கள் காதல் உறவை நல்ல நிலையில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், அதற்கு நீங்கள் உங்கள் பிறந்த சாதக பலனை சார்ந்து இருக்க வேண்டும். நீங்கள் விரும்புபவருடன் நீங்கள் அதிக உடைமையோடும், உணர்ச்சிவசப்பட்டும் நடந்து கொள்வீர்கள். மேலும் உங்கள் இருவருக்கும் இடையே புதிதாக ஒரு நபர் வருவதால் புதிதாக பிரச்சனைகளின் தாக்கம் உண்டாகும். நீங்கள் இனியும் இந்த காதல் தொடறது என்ற முடிவுக்கு வர நேரிடலாம். நீங்கள் குழந்தை பேறுக்காக காத்திருந்தால், அதற்கு உங்கள் பிறந்த சாதக பலன் இருக்க வேண்டும். IVF மற்றும் IUI போன்ற மருத்துவ சிகிச்சைகள் உங்களுக்கு எதிர்பார்த்த பலனைத் தராமல் போகலாம்.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic