![]() | குரு பெயர்ச்சி (2020 - 2021) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
அர்தஷ்டம சனி மற்றும் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சாதகமற்ற குருவின் சஞ்சாரத்தால் கடந்த ஒரு ஆண்டு காலம் நீங்கள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருந்திருப்பீர்கள். தற்போது குரு உங்கள் ராசியின் 4ஆம் வீட்டிற்கு பெயருவதால் சற்று ஆறுதலான சூழல் உண்டாகும். இந்த சஞ்சாரத்தால் உங்கள் பிரச்சனைகளின் தாக்கம் குறையும், ஆனால், பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். தற்போது ஏற்படும் இந்த குரு பெயர்ச்சியால் பெரிதாக எந்த அதிர்ஷ்டமும் உண்டாகாது.
மகர ராசியில் நிகழும் இந்த குரு பெயர்ச்சி 4 ½ மாத காலம் மட்டுமே இருக்கும் குறுகிய கால பெயர்ச்சியாகும். இதற்கு காரணம் தனுசு ராசி பெயர்ச்சியின் போது குரு மகர ராசியில் மார்ச் 30, 2020 முதல் ஜூன் 3௦, 2020 வரையிலான 3 மாத காலகட்டத்தில் சஞ்சரித்துவிட்டார். மேலும் மேலும் செப்டம்பர் 15, 2021 முதல் நவம்பர் 19, 2021 வரையிலான2 மாத காலகட்டத்தை கும்ப ராசி பெயர்ச்சியின் போது மகர ராசியில் குரு சஞ்சரிப்பார். அதனால் ஏப்ரல் 5, 2021 அன்று நிகழும் குரு பெயர்ச்சி ஒரு இயல்பான குரு பெயர்சியாகவே இருக்கும்.
ராகு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிலும், கேது 2ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்களுக்கு பிரச்சனைகளை உண்டாக்குவார்கள். குடும்பம் மற்றும் நிதி நிலையில் இருக்கும் பிரச்சனைகளில் சற்று நிவாரணம் கிடைக்கும்., ஆனால் உத்தியோகத்தில் அழுத்தம் மற்றும் பதற்றம் நிறைந்த சூழல் தொடரவே செய்யும். நீங்கள் உங்கள் உத்தியோகத்தில் வளர்ச்சியை எதிர்பார்ப்பதை தவிர்த்து விட்டு, உங்கள் வாழ்வாதாரதிற்காக உத்தியோகத்தை தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். குரு உங்கள் ராசியின் 5ஆம் வீடான பூர்வ புண்ய ஸ்தானத்திற்கு ஏப்ரல் 5, 2021 அன்று பெயர்ந்ததும் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். அதுவரை உங்களுக்கு சோதனை காலம்தான். உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு இந்த சோதனை காலத்தை கடக்க முயற்சி செய்யுங்கள்.
Prev Topic
Next Topic