![]() | குரு பெயர்ச்சி (2020 - 2021) வேலை / உத்தியோகம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | வேலை / உத்தியோகம் |
வேலை / உத்தியோகம்
ஜனவரி 2020 முதல் இன்றுவரி நீங்கள் மிகவும் மோசமான காலகட்டத்தை உங்கள் உத்தியோகத்தில் பார்த்திருப்பீர்கள். செப்டம்பர் அல்லது அக்டோபர் 2020 வாக்கில் உங்கள் உத்தியோகத்தை நீங்கள் இழந்திருந்தாலும், அல்லது உங்கள் நிறுவனத்துடன் உங்களுக்கு சில பிரச்சனைகள் ஏற்பட்டிருந்தாலும், அதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. குரு உங்கள் ராசியின் 4ஆம் வீட்டிற்கு பெயர்ந்தாலும், உங்களுக்கு உடனடியாக உதவி செய்யமாட்டார். ஆனால், குரு உங்கள் பிரச்சனைகளை குறைத்து உங்களுக்கு சிறிதளவாவது நிவாரணத்தை தருவார். நீங்கள் உங்கள் உத்தியோகத்தை இழந்திருந்தால், குருவின் பலத்தால் தற்காலிகமாக ஒரு நல்ல உத்தியோகம் கிடைக்கும். ஆனால் அதன் பதவி, சம்பளம் மற்றும் போனஸ் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் இல்லாமல் போகலாம்.
உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும், தற்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையிலேயே தொடருவது தான் நல்ல யோசனையாக இருக்கும். அலுவலகத்தில் அரசியல் அதிகரிக்கும். உங்கள் முதலாளி உங்களை அதிகம் கண்காணிப்பார். உங்கள் எச் ஆரிடம் நீங்கள் ஏதாவது புகார் கூறினால், அது உங்களுக்கே பிரச்சனையாக முடிந்து விடும். நீங்கள் எவ்வளவு போராடினாலும், உங்களால் வெற்றிப் பெற முடியாமல் போகலாம். இடமாற்றம், குடியேற்றம் மற்றும் வெளிநாட்டிற்கு பெயருவது போன்ற விடயங்கள் அடுத்த சில மாதங்களுக்கு தாமதமாகலாம்.
ஏப்ரல் 5, 2021 முதல் குரு உங்கள் ஜென்ம ராசியை 7 ஆண்டுகளுக்கு பிறகு பார்வை இடுவதால் நீங்கள் அதிக பலம் பெறுவீர்கள். அதுவரை நீங்கள் சோதனை காலத்தில் இருப்பீர்கள். சுதர்சன மகா மந்திரம் கேட்டு எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பை பெறுங்கள்.
Prev Topic
Next Topic