குரு பெயர்ச்சி (2020 - 2021) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Meena Rasi (மீன ராசி)

கண்ணோட்டம்


குரு உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் கடந்த ஒரு ஆண்டு காலமாக நல்ல நிலையில் சஞ்சரித்தார். இதனால் கடந்த மாதங்களில் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைத்திருக்கும். ஜனவரி 23, 2020 முதல் உங்களுக்கு ஏழரை சனி காலம் தொடங்கி இருக்கும். சனி பகவான் உங்களுக்கு சில பின்னடைவுகளை உண்டாக்கி இருந்திருப்பார். ஆனால் குரு பகவான் ஏழரை சனியால் உண்டாகும் தாக்கத்தை குறைத்திருப்பார். தற்போது குரு மற்றும் சனி பகவான் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரிகின்றனர். இதனால் உங்களுக்கு தற்போது இருக்கும் நிதி பிரச்சனைகள் மேலும் அதிகரிக்கக் கூடும். நீங்கள் எதை செய்தாலும் அதில் பின்னடைவுகள் ஏற்படும்.
மகர ராசியில் நிகழும் இந்த குரு பெயர்ச்சி 4 ½ மாத காலத்திற்கு மட்டுமே. இதற்கு காரணம் குரு மார்ச் 3௦, 202௦ முதல் ஜூன் 3௦, 202௦ வரையிலான 3 மாத காலத்தை மகர ராசியில் தனுசு ராசி பெயர்ச்சி காலத்திலும், செப்டம்பர் 15, 2021 முதல் நவம்பர் 19, 2021 வரையிலான 2 மாத காலத்தை கும்ப ராசி பெயர்ச்சியின் போது மகர ராசியிலும் சஞ்சரிப்பதால் தான். அதனால் கும்ப ராசியில் ஏப்ரல் 5, 2021 அன்று நிகழும் குரு பெயர்ச்சி ஒரு இயல்பான பெயர்ச்சியாக இருக்கும்.


ராகு உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களால் எந்த நல்ல பலன்களையும் எதிர்பார்க்க முடியாது. கேது உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் உத்தியோக வளர்ச்சியில் பிரச்சனைகளை உண்டாக்குவார். சனி பகவான் மற்றும் குரு இணைந்து உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் வாழ்க்கையில் ஏமாற்றங்கள் மற்றும் தோல்விகளை உண்டாக்குவார். நீங்கள் நவம்பர் 2௦, 2021 முதல் கடுமையான சோதனை காலத்தில் இருப்பீர்கள். ஏழரை சனியின் தாக்கத்தை 2021 மற்றும் 2022-இல் அதிகம் உணருவீர்கள்.


Prev Topic

Next Topic