![]() | குரு பெயர்ச்சி (2020 - 2021) வேலை / உத்தியோகம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | வேலை / உத்தியோகம் |
வேலை / உத்தியோகம்
சாதகமான குரு உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் கடந்த பெயர்ச்சியில் சஞ்சரித்ததால் நீங்கள் நல்ல மாற்றங்களை தந்திதிருந்திருப்பீர்கள். தற்போது குரு உங்கள் ராசியின் 12ஆம் வீட்டிற்கு நவம்பர் 2௦, 202௦ அன்று பெயருகிறார். மேலும் உங்களுக்கு ஏழரை சனி காலம் நடந்து கொண்டிருக்கின்றது. அடுத்த சில ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக நீங்கள் சோதனை காலத்தில் இருப்பீர்கள்.
உங்கள் வேலை பளு மற்றும் பதற்றம் அதிகரிக்கும். ஆனால் உங்கள் உடல் அதிக வேலை பார்க்க ஒத்துழைக்காமல் போகலாம். நீங்கள் உங்கள் வேலையை சரியான நேரத்தில் முடித்தாலும், உங்கள் மேலாளர் அதை குறித்து மகிழ்ச்சி அடைய மாட்டார். உங்களுடன் வேலை பார்ப்பவர்கள் மற்றும் உங்கள் மேலாளருடன் உங்களுக்கு உராய்வுகள் ஏற்படும். உங்கள் மறைமுக எதிரிகள் பலம் பெறுவார்கள். உங்கள் வளர்ச்சியை பாதிக்கும் வகையில் உங்களுக்கு எதிரான சதிகள் நடக்கும். உங்களால் உங்களை விட குறைந்த அனுபவம் உடையவர்கள் உங்களை விட உயர்ந்த பதவியை பதவி உயர்வு நேரத்தில் பெறுவதை ஏற்றுக் கொள்ள முடியாமல் போகலாம்.
உங்கள் முதலாளியிடம் புகார் கூறுவது போன்ற எந்த ஒரு அவசர முடிவுகளையும் செய்யாமல் இருப்பது நல்லது. அப்படி செய்தால், அது விடயங்களை மேலும் மோசமாக்கக் கூடும். உங்களால் இந்த குரு பெயர்ச்சி காலத்தில் உங்கள் உத்தியோகத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும். நீங்கள் இந்த காலகட்டத்தில் உங்கள் வாழ்வாதாரதிற்காக உங்கள் உத்தியோகத்தை பாதுகாத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். இந்த காலகட்டத்தில் வளர்ச்சியை எதிர்பார்க்க முடியாது. முக்கிய கிரகங்கள் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் இணைந்து சஞ்சரிபப்தால் நீங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். அப்படி செய்தால் உங்களுக்கு ஏற்படும் ஏமாற்றங்களும், தோல்விகளும் குறையும்.
Prev Topic
Next Topic